அமீரகத்தில் ‘Du’வின் இணைய சேவையில் இன்று பாதிப்பு.. புகாரளித்த ஆயிரக்கணக்கான பயனர்கள்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கிய தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்களில் ஒன்றான ‘Du’வின் ஆயிரக்கணக்கான பயனர்கள் இன்று (சனிக்கிழமை) இணைய இணைப்பில் செயலிழப்பை புகாரளித்து வருகின்றனர். இது சம்பந்தமாக ஆன்லைன் டிராக்கரான Downdetector.ae.இல் மதியம் 12 மணியளவில் 7,500 க்கும் மேற்பட்ட செயலிழப்பு அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குடியிருப்பாளர்கள் பலரும் திடீரென்று நண்பகலில் இணையசேவை துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்து வருவதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு ஆபரேட்டர் சில பகுதிகளில் அதன் பிராட்பேண்ட்/இன்டர்நெட் சேவைகளில் தொழில்நுட்ப பிரச்சனையை உறுதிப்படுத்தியுள்ளது.
துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில் டூ லேண்ட்லைன் மற்றும் வீட்டு இணைய சேவை டவுன் ஆகிவிட்டதாகவும், டூ வாடிக்கையாளர் சேவை எண் 155 ஐயும் அணுக முடியாத நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் பல நிமிடங்களுக்கும் மேலாக இணையம் வேலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
இவர்களைப் போல மற்ற டூ சந்தாதாரர்களும் இதே சிக்கலைப் புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில், டூ X தளத்தில் ஒரு இடுகையில் “அவர்களுடைய குழு விரைவில் சேவையை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது” என்று கூறியுள்ளது. இந்த ஆலோசனை பகிரப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, du இன் செய்தித் தொடர்பாளர் “ஒரு மணி நேரத்திற்குள் பிரச்சினை அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்பட்டது” என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் “எங்கள் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel