அமீரக செய்திகள்

துபாயின் புதிய சட்டம்.. துபாய் லோகோவை பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை.. 500,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!

துபாயில் துபாய் எமிரேட் மற்றும் துபாய் அரசாங்கத்தின் சின்னங்கள் அல்லது அடையாளங்களளின் (emblems or logos) பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் வெளியிடப்பட்ட புதிய சட்டம், விளம்பரம் மற்றும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல் போன்ற வணிக நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் லோகோக்களைப் பயன்படுத்துவதை தடை செய்கிறது.

மேலும், லோகோவை எந்த வகையிலும் தாக்குவது அல்லது அதை சிதைக்கும் அல்லது அதன் மதிப்பு அல்லது நிலையை பாதிக்கும் எந்த வகையிலும் அதைப் பயன்படுத்தவும் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் துபாயின் எமிரேட் அல்லது பொது ஒழுங்கு மற்றும் ஒழுக்கங்களுடனான மோதல்களுக்கு முரணான எந்தவொரு செயல்பாடு அல்லது நிகழ்விலும் சின்னத்தைப் பயன்படுத்துவதும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் படி, தடையை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 100,000 திர்ஹம்ஸ் முதல் 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், துபாய் எமிரேட்டின் நிர்வாகக் குழுவின் தலைமைச் செயலகத்தால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டியின்படி லோகோ பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் புதிய சட்டம் குறிப்பிடுகிறது.

துபாய் எமிரேட் லோகோவானது சிறப்பு அனுமதியுடன் நிறுவனங்களின் இடங்கள், நிகழ்வுகள், ஆவணங்கள் மற்றும் முத்திரைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துபாய் அரசாங்க மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கட்டிடங்கள், தளங்கள், நிகழ்வுகள், செயல்பாடுகள், பதிவுகள், ஆவணங்கள், தளங்கள் மற்றும் பயன்பாடுகளில் துபாய் அரசாங்க லோகோ பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த புதிய சட்டத்தின்படி, தடைசெய்யப்பட்ட எந்தவொரு செயலையும் மீறுபவர்களைக் காணும் எவரும், இது தொடர்புடைய அதிகாரத்திற்கு புகாரளிக்க வேண்டும் என்றும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!