அமீரக செய்திகள்

UAE: மீண்டும் வந்தாச்சு ‘Weight Loss Challenge’.. ஒரு கிலோ எடை குறைப்புக்கு 300 திர்ஹம்ஸ் வரை பரிசு..

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் உள்ள RAK மருத்துவமனையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் எடை இழப்பு சவால் (weight loss challenge) இந்த பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திரும்புகிறது. இதில் பங்கேற்பவர்கள் இழக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 300 திர்ஹம்ஸ் வரை வெல்லக்கூடிய வாய்ப்பைப் பெறலாம்.

வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி ‘RAK Biggest Weight Loss Challenge (RBWLC)’ தொடங்கவிருக்கும் இந்த சவாலுக்கான பதிவு இலவசம் மற்றும் அனைவருக்கும் திறந்திருக்கும் என்றும், பங்கேற்பாளர்கள் அதிகாரப்பூர்வ RBWLC இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் தொடங்கி மே 22 வரை 12 வாரங்களுக்கு நீடிக்கும் இந்தாண்டு பதிப்பில் குடும்பங்கள் ஒன்றாக வேலை செய்து உடல் எடை குறைப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதிய குடும்ப பிரிவை சேர்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக பங்கேற்க ஊக்குவிக்கிறது. இந்த Weight Loss Challenge-ன் பிரிவுகள், பரிசுகள் உள்ளிட்ட சில முக்கிய விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:

பிரிவுகள் மற்றும் பரிசுகள்:

  • Physical Category: பங்கேற்பாளர்கள் சவாலின் தொடக்கத்திலும் முடிவிலும் RAK மருத்துவமனையில் எடைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சிறந்த எடை குறைப்பு அடைந்த ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்கள் எடை இழந்த ஒரு கிலோவிற்கு 300 திர்ஹம்ஸ், 200 திர்ஹம்ஸ் மற்றும் 100 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசுகளைப் பெறுவார்கள்.
  • Virtual Category: நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கான இந்த பிரிவினர் உள்ளூர் கிளினிக்குகளில் எடையை பரிசோதிக்க அனுமதிக்கிறது. இதில் வெற்றியாளர்களுக்கு தங்கும் இடங்கள், சுகாதாரப் பேக்கேஜ்கள், சாப்பாடு மற்றும் ஜிம் உறுப்பினர்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்
  • குடும்ப பிரிவு (Family Category): இந்த பிரிவில் குறைந்தது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் ஒரு குழுவாக பங்கேற்கலாம். அதிக சராசரி எடை இழப்பு கொண்ட குடும்பம் வாழ்க்கை முறை வவுச்சர்களை (lifestyle vouchers) வெல்லலாம்.
  • கார்ப்பரேட் டீம் சவால் (Corporate Team Challenge): நிறுவனங்கள் அணிகளாக பங்கேற்கலாம். மேலும் 10 ஊழியர்களின் அதிக சராசரி எடை இழப்பைக் கொண்ட அணிக்கு RBWLC கார்ப்பரேட் சவால் டிராஃபி வழங்கப்படும்
  • பள்ளிகள் எடை இழப்பு சவால் (Schools Weight Loss Challenge): பள்ளிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து பங்கேற்கலாம். மேலும் இரண்டு பிரிவுகளில் இதில் பங்கேற்கலாம்: மாணவர்களிடையே குறைந்த சராசரி BMI மற்றும் ஊழியர்களிடையே அதிக சராசரி எடை இழப்பு கொண்டவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆவர். வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும்.

RAK மருத்துவமனையின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கிட்டத்தட்ட 40 சதவீத பெரியவர்களும் 40 சதவீத குழந்தைகளும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர், இது நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் அதிகரிப்புக்கு பங்களிக்கிறது.

இது குறித்து RAK ஹாஸ்பிட்டலின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராசா சித்திகி அவர் பேசுகையில், இந்த முன்முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் மட்டுமல்லாமல், உலகளவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் சவாலில் சேர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பரந்த பார்வையாளர்களை அடைவதற்கான சவாலை எவ்வாறு விரிவுபடுத்த முடியும் என்பதை ஆராய திட்டங்கள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டின் சவால் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!