அமீரக செய்திகள்

அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு 70% வரை தள்ளுபடியுடன் விற்பனை…

அமீரகத்தில் ரமலான் மாதம் மார்ச் 1ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரமலான் மாதத்திற்கான நேரம் நெருங்கிவருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்பாளர்கள் பண்டிகை கால சலுகைகளை பயன்படுத்தி தேவையான பொருட்களை வாங்குவதற்கு பட்டியல் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நாட்டில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் 70 சதவீதம் வரை தள்ளுபடியுடன் விற்பனையைத் தொடங்கியுள்ளனர். ரமலானை முன்னிட்டு, அமீரகத்தில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்டுகள், வீட்டு அலங்கார நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்கள் போன்ற முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் சிறந்த தள்ளுபடியை அறிவிப்பது வழக்கம்.

இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் இந்த விற்பனைத் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள அதிக அளவில் பொருட்கள் வாங்குவதைத் தேர்ந்தெடுப்பதால், வழக்கமாக ரமலான் காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தள்ளுபடிகள்

துபாயை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனையாளரான யூனியன் கோ-ஆப் (Union Coop) அதன் 2025 ரமலான் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது, இது ஐக்கிய அரபு அமீரகத்தின் “Year of the Community” என்ற முயற்சியுடன் ஒத்துப்போகிறது. அதன்படி, குடியிருப்பாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் 5,000 க்கும் மேற்பட்ட பொருட்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடியை அனுபவிக்கலாம். மேலும், இது உள்ளூர் விவசாயத்தை ஆதரிக்க 42 க்கும் மேற்பட்ட UAE பண்ணைகளுடன் கூட்டு சேர்ந்து புதிய மற்றும் இயற்கை விளைபொருட்களை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  குடியிருப்பாளர்கள் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் சாதனங்களிலும் 50 சதவீதம் வரை தள்ளுபடியை அனுபவிக்கலாம் என்று jumbo எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் சாதா தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, எனவே, இந்த மாதத்தில் மிகவும் கவர்ச்சிகரமான ஒப்பந்தங்களை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை போன்றே லூலூ ஹைப்பர் மார்க்கெட், கேரி ஃபோர் போன்ற மற்ற அனைத்து விற்பனை நிலையங்களிலுமே ரமலானுக்கு சிறந்த ஆஃபர்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!