ADVERTISEMENT

துபாயில் களைகட்டும் ரமலான் ஸ்ட்ரீட் ஃபுட் ஃபெஷ்டிவல்… Dh1 முதல் என்னவெல்லாம் கிடைக்கும்?

Published: 12 Mar 2025, 3:50 PM |
Updated: 12 Mar 2025, 4:19 PM |
Posted By: Menaka

ரமலானை முன்னிட்டு ரமலான் இரவுச் சந்தை, வானவேடிக்கை காட்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என அமீரகம் முழுவதும் பண்டிகைக் கோலம் களைகட்டியிருக்கும் நிலையில், இப்போது கராமாவில் ரமலான் ஸ்ட்ரீட் ஃபுட் ஃபெஸ்டிவலின் மூன்றாவது பதிப்பு திரும்பியுள்ளது. ஷேக் ஹம்தான் காலனியில் மார்ச் 23 வரை நடைபெறும் இந்த விழா, தெற்காசிய உணவு வகைகளை முயற்சிக்க ஆர்வமுள்ள பெரிய கூட்டத்தை ஈர்த்து வருவதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இந்தாண்டு பதிப்பில் கராமாவின் தெருக்கள் உணவகங்களில் கூடும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. உணவகங்கள் இரவு வரை திறந்திருப்பதால், வணிக உரிமையாளர்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காணும்போதும், வாடிக்கையாளர்கள் பல்வேறு பாரம்பரிய உணவுகளில் ஈடுபடுவதாலும் தெருக்கள் பரபரப்பாகக் காணப்படும்.

NA100325-SK-RAMADANSTREET Residents at the Ramadan Street food festival in Karama Dubai. The food festival runs until March 23. (Story by Hind). March 10, 2025. Photo by Shihab

ADVERTISEMENT

கிரில்டு சிக்கன், பிரியாணி, சமோசாக்கள், பேஷன்ஃப்ரூட் ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் சுலைமானி தேநீர் போன்ற எண்ணற்ற பல்வேறு சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. அனைத்து ரசனைகளுக்கும் ஏற்றவாறு வட மற்றும் தென்னிந்திய உணவுகளும் கிடைக்கிறது.

NA100325-SK-RAMADANSTREET Residents at the Ramadan Street food festival in Karama Dubai. The food festival runs until March 23. (Story by Hind). March 10, 2025. Photo by Shihab

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், சிற்றுண்டிகள் வெறும் 1 திர்ஹம்ஸிலிருந்து தொடங்குகின்றன, வெறும் 12 திர்ஹம்ஸ் முதல் 15 திர்ஹம்ஸ் வரை விலையில், பார்வையாளர்கள் ஒரு ப்ளேட் பிரியாணியை பெறலாம். மேலும் முழு உணவின் விலை 20 திர்ஹம்ஸ் மட்டுமே. எனவே, அனைவரும் மலிவு விலையில் உணவைப் பெறலாம்.

அமோக விற்பனை:

இந்த விழாவில் பங்கேற்றுள்ள சிறிய உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பைக் காண்கின்றன. உணவுத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கியோஸ்க்களில் ஒன்றில் ஹோம்மேட் என்ற உணவகம், முதல் முறையாக விழாவில் இணைந்தது, இப்போது தினமும் 300-400 கப் குல்ஃபி சாய் விற்பனை செய்வதாக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

NA100325-SK-RAMADANSTREET Residents at the Ramadan Street food festival in Karama Dubai. The food festival runs until March 23. (Story by Hind). March 10, 2025. Photo by Shihab

அதேபோல், ஸ்பைசி கஃபே மண்டி & கிரில்லில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இரவு 11 மணிக்கு வாடிக்கையாளர்களால் நிரம்பி இருக்கும் கடை காலை 4 மணி வரை கூட்டமாக இருப்பதாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளி குறிப்பிட்டுள்ளார்.

NA100325-SK-RAMADANSTREET Residents at the Ramadan Street food festival in Karama Dubai. The food festival runs until March 23. (Story by Hind). March 10, 2025. Photo by Shihab

இந்த வரிசையில், ஃப்ரூட்பே என்ற ஐஸ்கிரீம் கடையும் சிறந்த விற்பனையை காண்பதாகத் தெரிவித்துள்ளது. அபுதாபி, ஷார்ஜா மற்றும் பிற எமிரேட்களில் இருந்து கராமாவிற்கு மக்கள் வருகை தருவதாகவும், புனித மாதத்தில் மட்டுமே விற்பனை சூடு பிடிக்கிறது, ரமலான் பிறகு வணிகம் மந்தமாகிறது என்றும் ஊழியர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில், இந்த விழா புனித மாதத்தில் சிறிய வணிகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன் பார்வையாளர்கள் சுவையான உணவுகளை அனுபவிக்கவும் ரமலானை ஒன்றாகக் கொண்டாடவும் வழிசெய்கிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel