அமீரக குடியிருப்பாளர்கள் ஈத் விடுமுறைக்கு வெளிநாட்டு சுற்றுலா செல்ல மலிவான 5 நாடுகள்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு நீண்ட நாள் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த நீண்ட வாரயிறுதியின் போது அமீரகத்தில் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல பெரிதும் விரும்புகின்றனர்.
ஏனெனில், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் விசா செயல்முறையை முடிப்பது சிரமமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு வாரக்கணக்கில் விசா செயல்முறைக்கு அலைய வேண்டிய தேவையில்லாத மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடி விமானங்களைக் கொண்ட ஒரு இடத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு விசா இல்லாத நுழைவு அல்லது வருகையின் போது எனுக்க வேண்டிய விசாக்கள் என தொந்தரவு இல்லாத பயணத்தை வழங்கும் சில சிறந்த விருப்பங்கள் உள்ளன.
அவ்வாறு அமீரக குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் பயணிக்க சிறந்த 5 நாடுகள் மற்றும் விசா செல்லுபடியாகும் காலம் உட்பட முழு விபரங்களையும் பின்வருமாறு பார்க்கலாம்:
அஜர்பைஜான்
அமீரகக் குடியிருப்பாலர்களுக்கான விரைவான சுற்றுலா தலங்களாக அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா பெருகிய முறையில் பிரபலமாகிவிட்டன, மேலும் அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கு பல பேக்கேஜ்களை வழங்குவதாக பயண ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, அஜர்பைஜான் செல்வதற்கு இ-விசா அல்லது அரைவல் விசா என உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன:
- eVisa: இ-விசாவுக்கு உங்கள் பயணத்திற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இந்த விருப்பத்தின் மூலம் விமான நிலையத்தில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
- அரைவல் விசா: விமான நிலையத்தில் நிறுவப்பட்ட ஸ்மார்ட் மெஷின்களில் உங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து, உங்கள் பயண விவரங்களை உள்ளிட வேண்டியிருக்கும்.
மேற்கூறிய இரண்டு விசா விருப்பங்களுக்கும் தோராயமாக 140 திர்ஹம்ஸ் வரை செலவாகும். மேலும், இரண்டு விருப்பங்களிலும் நாட்டிற்குள் வந்தவுடன் 30 நாட்கள் வரை தங்க முடியும்.
தேவையான ஆவணங்கள்:
- குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
- குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் UAE ரெசிடென்ஸி விசா.
ஜார்ஜியா
ஜார்ஜியா அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு வருகையின் போது விசா (arrival visa) மட்டுமே வழங்குகிறது, இந்த விசாவில் 30 நாட்கள் வரை நாட்டில் தங்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
- குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸி விசா.
- தங்குமிடம், சுகாதார காப்பீடு மற்றும் நாட்டில் தங்குவதற்கு போதுமான நிதிக்கான ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டியிருக்கலாம். ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனத்தில் பயணித்தால், பயண காப்பீட்டு செலவு உள்ளடக்கியது மற்றும் ஒட்டுமொத்த செலவில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்த விசா 30 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
மாலத்தீவுகள்
மாலத்தீவுகளின் இமிகிரேஷன் ஆணையத்தின் வலைத்தளத்தின் படி, UAE குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து நாட்டினரும் வருகையின் போது விசாவைப் பெறலாம். பின்வரும் அடிப்படை நுழைவுத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தால் போதும், நீங்கள் மாலத்தீவு செல்லலாம்.
அடிப்படை நுழைவுத் தேவைகள்:
- குறைந்தது ஒரு மாத செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
- முழுமையான பயணத் திட்டம் (திரும்பும் டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு, நிதிச் சான்று).
- வருகை மற்றும் மாலத்தீவுக்கு மற்றும் புறப்படும் போது, விமான நேரத்தின் 96 மணி நேரத்திற்கு முன் ‘Traveller Declaration’ படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மாலத்தீவு குடிவரவு ஆன்லைன் போர்ட்டல் மூலம் நீங்கள் படிவத்தை நிரப்பலாம் – https://imuga.immigration.gov.mv/
- ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்புவதற்கு, உங்கள் பாஸ்போர்ட் மற்றும் UAE ரெசிடென்ஸி விசாவை காட்ட வேண்டியிருக்கலாம்.
விசா செல்லுபடியாகும் காலம்: 30 நாட்கள் வரை தங்க அனுமதி உண்டு.
சீஷெல்ஸ்
மாலத்தீவுகளைப் போலவே, சீஷெல்ஸும் ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து நாட்டினருக்கும் விசா இல்லாத நுழைவை வழங்குகிறது. இருப்பினும், சுற்றுலாவாசிகள் நுழைவைப் பெறுவதற்காக செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது சீஷெல்ஸ் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற பயண ஆவணங்களை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்று சீஷெல்ஸ் வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பின்வரும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்தால் போதும், வருகையின் போது நுழைவு அனுமதியைப் பெறுவீர்கள்:
நுழைவுத் தேவைகள்:
- உங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பும் வரை நாட்டில் தங்கும் காலத்திற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
- செல்லுபடியாகும் ரிட்டர்ன் டிக்கெட்.
- உறுதிப்படுத்தப்பட்ட தங்குமிடம்.
- போதுமான நிதிக்கான சான்று (குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு US$150, தோராயமாக. 550 திர்ஹம்ஸ்).
விசா செல்லுபடியாகும் காலம்: 30 நாட்கள் வரை தங்கலாம்.
உஸ்பெகிஸ்தான்
உஸ்பெகிஸ்தான், அனைத்து தேசிய இனங்களையும் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகிறது. அமீரகத்தைத் தளமாகக் கொண்ட விமான நிறுவனங்கள் உஸ்பெகிஸ்தானில் உள்ள மூன்று முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்களை வழங்குகின்றன. நீங்கள் விரும்பினால், முன்கூட்டியே eVisa-க்கு விண்ணப்பிக்கலாம்.
விசா தேவைகள்:
- எமிரேட்ஸ் ஐடி (குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்).
- குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
விசா செல்லுபடியாகும் காலம்: பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுக்கு நீங்கள் ஆவணங்களை வழங்கியதும், விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தங்கலாம். இதற்கு பதிலாக, நாட்டின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விசா போர்ட்டல் – E -VISA.gov.uz மூலம் நீங்கள் ஒரு EVISA க்கு விண்ணப்பிக்கலாம். eVisa 73.45 திர்ஹம்ஸ்க்குக் கிடைக்கிறது மற்றும் ஒப்புதலுக்கு இரண்டு வேலை நாட்கள் வரை ஆகலாம்.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள இடங்கள் அமீரக குடியிருப்பாளர்களுக்கு எளிதான அணுகலை வழங்குகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel