அமீரகத்தில் ரெசிடன்ஸ் விசா ரத்து செய்யப்பட்ட பிறகும் வங்கிக் கணக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் பல வெளிநாட்டவர்கள் தங்கள் வேலை மற்றும் குடியிருப்பு விசாக்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர் தங்கள் வங்கிக் கணக்குகள் முடக்க அல்லது மூடப்படும் என்று கவலை தெரிவிகின்றனர். உண்மையில், விசாவை ரத்து செய்வது தானாகவே ஒரு வங்கிக் கணக்கை முடக்குவதற்கோ அல்லது மூடுவதற்கோ வழிவகுக்காது.
UAE மத்திய வங்கி ஒழுங்குமுறை எண். 29/2011 இன் படி, வாடிக்கையாளரின் முகவரி தெரிந்திருந்தால் அல்லது கணக்கு வைத்திருப்பவர் வங்கி வழங்கும் கணக்கையோ அல்லது பிற சேவைகளையோ தீவிரமாகப் பயன்படுத்தினால், ஒரு வங்கிக் கணக்கை செயலற்றதாகக் கருத முடியாது.
UAE மத்திய வங்கி விதிமுறைகளின் படி, செயலற்ற தன்மை என்பது கணக்கில் கடைசி பரிவர்த்தனையின் தேதியிலிருந்து எந்த பரிவர்த்தனைகளும் அல்லது சேவை கோரிக்கைகள், புதுப்பிப்பு போன்ற நிதி அல்லாத நடவடிக்கைகள் இல்லாமல் மற்றும் கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னணு ரீதியாகவோ எந்தத் தொடர்பும் இல்லாததன் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. இது செயலற்ற கணக்குகள் குறித்த மத்திய வங்கி சுற்றறிக்கை எண்.1/2020க்கு இணங்க உள்ளது.
மேற்கூறிய விதிமுறைகளின் படி, வேலையை இழந்து விசா ரத்து செய்யப்படுவதை எதிர்கொள்ளும் குடியிருப்பாளர்கள், வங்கியுடன் தொடர்பில் இருந்து, பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து செய்யும் வரை அல்லது தகவல்களைப் புதுப்பிப்பது போன்ற நிதி அல்லாத செயல்களைச் செய்யும் வரை, கணக்கு செயலில் இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், ஒரு குடியிருப்பு விசா ரத்து செய்யப்பட்டவுடன், வங்கிகள் கணக்கை ‘non-resident account’ யின் கீழ் மறுவகைப்படுத்தலாம், இது உங்கள் வங்கிக் கணக்கின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றியமைக்கலாம். இதில் திருத்தப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் அல்லது சில சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் ஆகியவை அடங்கும்.
எனவே, குடியிருப்பாளர்கள் விசா நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தங்கள் வங்கிகளுக்குத் தெரிவிக்கவும், அவர்கள் அமீரகத்திற்குள் புதிய வேலைவாய்ப்பைத் தீவிரமாகத் தேடினால் அது குறித்து வங்கியிடம் உத்தரவாதம் அளிக்கவும் நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel