அமீரக செய்திகள்

அமீரக நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்துகள் மோதி விபத்து.. 13 மாணவர்கள், ஆசிரியர் காயமடைந்ததாக தகவல்…

ஈத் அல் அதா விடுமுறை முடிந்து திங்கட்கிழமை நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பிய நிலையில், அன்று மதியம் தேசிய நெடுஞ்சாலை E311 இல் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 13 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்து பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது, இது விடுமுறைக்குப் பிறகு பள்ளி தொடங்கிய முதல் நாளில் நேர்ந்ததால் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில் ஜூன் 9 ஆம் தேதி பிற்பகல் 3:11 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 13 நிமிடங்களுக்குள் அந்த இடத்தை அடைந்த தேசிய ஆம்புலன்ஸ், 6 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வெளியான ஆரம்ப அறிக்கைகளில், ஷார்ஜாவில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையில் விபத்து நடந்ததாக தவறாகக் குறிப்பிட்டன. இருப்பினும், இது பின்னர் சரி செய்யப்பட்டது, மேலும் சரியான இடம் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம் ஷார்ஜாவில் நடக்கவில்லை என்றும் ஷார்ஜா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

அரிதான சம்பவங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளி பேருந்து விபத்துக்கள் மிக அரிதானவையாகும், ஆனால் அவை நிகழும்போது, ​​கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை அவை எடுத்துக்காட்டுகின்றன. முன்னதாக, பிப்ரவரி 2023 இல், ஒரு பேருந்து திடீரென திருப்பியதால், மூன்று மாணவர்கள் மற்றும் இரண்டு மேற்பார்வையாளர்கள் சிறிது காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2023 இல் நடந்த ஒரு கடுமையான விபத்தில், ஹத்தா-லஹ்பாப் சாலையில், நெரிசலான, அங்கீகரிக்கப்படாத பள்ளி போக்குவரத்து வாகனம் கவிழ்ந்ததில், ஏழு வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் பள்ளி மண்டலங்களைச் சுற்றி சாலைப் பாதுகாப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள், கடுமையான மீறல்களுக்கு 200,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் மாணவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சிறப்புப் பயிற்சி பெற வேண்டும் என்று துபாய் கட்டளையிடுகிறது. அதுமட்டுமில்லாமல், ஷார்ஜாவில், 2,000 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் இப்போது கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன, இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பயணங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!