ADVERTISEMENT

துபாயில் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!!

Published: 3 Aug 2026, 6:48 PM |
Updated: 3 Aug 2026, 6:52 PM |
Posted By: admin

துபாயின் பரபரப்பான சாலையான ஷேக் சையத் சாலையில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் துபாய் அரசு ஊடகத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள துபாய் சிவில் பாதுகாப்புத் துறையினர் மீட்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொண்டு வருவதாக துபாய் ஊடக அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் காயமடைந்தவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் உயிரிழந்த நபர் குறித்த தகவலும் விரைவில் தெரிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இதே போல கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி ஷேக் சையத் சாலையில் உள்ள சைக்கிள் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட அந்தத் தீ விபத்தைக் கட்டுப்படுத்த துபாய் சிவில் பாதுகாப்புத் துறையினர் பல மணிநேரம் போராடி நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT