துபாய்: 637 புதிய பேருந்துகளை வாங்க ஒப்பந்தமிட்ட RTA..!! 40 எலெக்ட்ரிக் பேருந்துகளை கோடையில் சோதனை செய்யவும் திட்டம்..!!

துபாய் எமிரேட்டானது உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து நெட்வொர்க்கை மேம்படுத்த ஒரு பெரிய புதிய முயற்சியுடன் பசுமையான பொது போக்குவரத்தை நோக்கிய தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 40 மின்சார வாகனங்கள் உட்பட 637 புதிய பேருந்துகளை அதன் வாகனப் பிரிவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய மின்சாரப் பேருந்து ஆர்டராகும்.
அனைத்து பேருந்துகளும் யூரோ 6 குறைந்த உமிழ்வு தரத்தை பூர்த்தி செய்யும், இதனால் அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் திறமையாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை 2025 மற்றும் 2026 இல் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்துகளை வாங்குவதற்கு வால்வோ பேருந்துகள் (Volvo Buses), MAN, ஜாங்டாங் பேருந்து (Zhongtong Bus) மற்றும் அனடோலு இசுசு (Anadolu Isuzu) ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகளுடன் RTA ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
கூடுதலாக, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் பேட்டரி அமைப்புகள் பொருத்தப்பட்ட ஒரு அதிநவீன மின்சார பேருந்தை இயக்குவதற்காக சீன மின்சார வாகன நிறுவனமான BYD உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ஆணையம் கையெழுத்திட்டுள்ளது. தீவிர சூழ்நிலைகளில் பேருந்தின் செயல்திறனை சோதிக்க துபாயின் கோடை காலத்தில் சோதனை நடத்தப்படும் என்றும் RTA தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை போக்குவரத்து உட்பட அனைத்து துறைகளிலும் நிலையான நகர்ப்புற மேம்பாடு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் பற்றிய துபாயின் பரந்த பார்வையுடன் ஒத்துப்போகிறது. இது UAE இன் நிகர பூஜ்ஜிய 2050 இலக்குகளையும் ஆதரிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel