ஈத் அல் அதாவிற்கு துபாய் ஏர்போர்ட்டில் இலவச ஐஸ்கிரீம்…. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் ஈத் அல் அதா விடுமுறையைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் அதன் பயணிகளுக்கு இலவசமாக குளுகுளுவென ஐஸ்கிரீம்களை வழங்கவுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையின் படி, ஜூன் 6 முதல் 20 வரை, எமிரேட்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச ஐஸ்கிரீம்களை வழங்கும் நான்கு ஐஸ்கிரீம் வண்டிகள் டெர்மினலை சுற்றி நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும், மேலும் முழு குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் வண்டிகளில் மாம்பழம், சாக்லேட், ஸ்ட்ராபெரி, அத்துடன் பேஷன்ஃப்ரூட் மற்றும் ராஸ்பெர்ரி உள்ளிட்ட பல்வேறு சுவைகள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்து சேரவும், தங்கள் விமானத்திற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்பே இமிக்ரேஷன் செயல்பாடுகளை முடிக்கவும் நினைவூட்டப்படுகிறது. ஜூன் 1 மற்றும் 9 க்கு இடையில் பயண நெரிசல் எதிர்பார்க்கப்படுவதால், பயணிகள் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே சரியான போர்டிங் கேட்டில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel