அமீரக செய்திகள்

UAE வங்கிக்கு அபராதம் விதித்த மத்திய வங்கி: 6 மாதங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளவும் தடை!!

இஸ்லாமிய வங்கிக்கான ஷரியா நிர்வாக விதிகளை மீறியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி (CBUAE) அமீரகத்தில் செயல்பட்டு வரும் ஒரு வங்கிக்கு 3.5 மில்லியன் திர்ஹம் அபராதம் விதித்துள்ளது மற்றும் ஆறு மாதங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள தடை விதித்துள்ளது. ஷரியா நிர்வாக கட்டமைப்பு மற்றும் பிற சட்ட விதிகளுக்கு வங்கி இணங்காததற்காக இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் 2018 ஆம் ஆண்டின் டெக்ரெட்டல் ஃபெடரல் சட்டம் எண் (14) இன் பிரிவு 137 இன் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், மத்திய வங்கியானது வெளிப்படைத்தன்மை, சட்ட இணக்கம் மற்றும் நிதி அமைப்பின் ஒட்டுமொத்த ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் ஒழுங்குமுறை தரநிலைகளை அமல்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் அனைத்து உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக CBUAE தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!