அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கான இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு..!!

இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, இஸ்லாமிய புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வருகின்ற ஜூன் 27, வெள்ளிக்கிழமை அமீரகத்தில் பொது விடுமுறையாக இருக்கும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மனிதவளத்திற்கான கூட்டாட்சி ஆணையம் (FAHR) பொதுத்துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நீண்ட வார விடுமுறையை வழங்கும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் வழக்கமான வேலை நேரம் ஜூன் 30, திங்கள் கிழமை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.
இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம் முதல் நாளில் தொடங்குகிறது, மேலும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பிறை பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பொது விடுமுறை பட்டியலுடன் ஒத்துப்போகிறது. ஈத் அல் அதா விடுமுறைகளைத் தொடர்ந்து, இந்த மாதம் குடியிருப்பாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட இரண்டாவது விடுமுறை இதுவாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel