ADVERTISEMENT

அமீரகம்னு சொன்னாலே பாதுகாப்பு தான்.. உலகின் பாதுகாப்பான நகரங்களில் முன்னணி வகிக்கும் 4 எமிரேட்.. முதலிடம் எது தெரியுமா..??

Published: 18 Jan 2026, 5:58 PM |
Updated: 18 Jan 2026, 5:59 PM |
Posted By: admin

ஆன்லைன் தரவு தளமான நம்பியோவின் (Numbeo) 2026 ஆம் ஆண்டுக்கான இணையதளத்தில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு குறியீட்டு தரவுகளின்படி, உலகளவில் பாதுகாப்பிற்கு பெயர்போன அமீரக நகரங்களே பட்டியலில் தொடர்ந்து முன்னணி வகிக்கின்றன. இதனடிப்படையில் நான்கு ஐக்கிய அரபு அமீரக நகரங்கள் உலகின் பாதுகாப்பான நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகளவில் 400 நகரங்களை உள்ளடக்கிய நம்பியோவின் பாதுகாப்பு குறியீட்டில் வெளியான பட்டியலின்படி இந்த ஆண்டும் அபுதாபி உலகின் பாதுகாப்பான நகரமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதனையடுத்து ராஸ் அல் கைமா, அஜ்மான் மற்றும் ஷார்ஜா ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பாதுகாப்பான நகரங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிராந்திய வணிகத் தலைநகரான துபாய், உலகளாவிய தரவுத்தள வழங்குநரால் ஆறாவது இடத்தில் உள்ளது.

இதன் மூலம் மற்ற நாடுகளின் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களை விட ஐக்கிய அரபு அமீரக நகரங்கள் பாதுகாப்பான மையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இது அமீரகத்தின் பாதுகாப்பான மையத்தின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது. அதே நேரம், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நகரங்கள் தோஹா (5), மஸ்கட் (8), ரியாத் (34), ஜெத்தா (40), டெல் அவிவ் (55), மற்றும் குவைத் நகரம் (73) போன்ற தரவரிசையை பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதேபோல், நான்கு ஐக்கிய அரபு அமீரக நகரங்களும் நம்பியோவின் குற்றக் குறியீட்டில் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்து, பாதுகாப்பு குறியீட்டில் தங்கள் நிலையை வலுப்படுத்துகின்றன.

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு உலகளவில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், குறிப்பாக துபாய், பில்லியன் கணக்கான திர்ஹம்ஸ் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களை ஈர்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு ஆய்வான தி ரைஸ் ஆஃப் துபாய் படி, ஜூன் 2025 இறுதி நிலவரப்படி துபாயில் 86,000 மில்லியனர்கள், 251 சென்டி-மில்லியனர்கள் மற்றும் 23 பில்லியனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel