ADVERTISEMENT

அபுதாபியில் எதிஹாட் ரயில் நிலையத்துடன் இணைக்கும் இரண்டு புதிய பேருந்து வழித்தடங்கள் அறிமுகம்: பயணிகளுக்கு கூடுதல் வசதி!!

Published: 24 Jul 2026, 1:11 PM |
Updated: 24 Jul 2026, 1:11 PM |
Posted By: Menaka

சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ள முகமது பின் சையத் சிட்டி ரயில் நிலையத்தை, ‘மெயின்’ (Main) மற்றும் ‘அல் ஜஹியா’ (Al Zahya) பஸ் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் MR1 மற்றும் MR2 ஆகிய இரண்டு புதிய பேருந்து சேவைகளை அபுதாபி அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட எதிஹாட் ரயில் பயணிகள் சேவையை மக்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி மற்றும் ஃபுஜைரா நகரங்களை இணைக்கும் வகையில், தினமும் தலா மூன்று பயணங்கள் வீதம் மொத்தம் ஆறு பயணங்களுடன், எதிஹாட் ரயில் தனது முதல் கட்ட பயணிகள் சேவையை ஜூன் 30 அன்று தொடங்கியது. இதன் முழுமையான ரயில் கட்டமைப்பு 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மேலும், பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதிசெய்யும் விதமாக, ரயிலின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களுக்கு ஏற்ப பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளை ஒருங்கிணைக்க பொதுப் போக்குவரத்து அதிகாரிகளுடன் எத்திஹாத் ரயில் நிர்வாகம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, முகமது பின் சையத் சிட்டி நிலையத்திலிருந்து ADNOC தலைமையகம், ADNEC மையம் மற்றும் ரீம் மால் (Reem Mall) போன்ற அபுதாபியின் முக்கிய இடங்களுக்குச் செல்ல 10 திர்ஹம் கட்டணத்தில் ‘ஷட்டில்’ (shuttle) பேருந்து வசதியும் தொடங்கப்பட்டது. இதற்கான முன்பதிவை எத்திஹாத் ரயில் செயலி அல்லது இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம் என்று பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

Abu Dhabi launches two new bus lines connecting passengers to Etihad Rail station

அதுமட்டுமில்லாமல், ஃபுஜைரா ரயில் நிலையத்தில் டாக்ஸி நிறுத்தங்கள், பயண முன்பதிவு வாகனங்களுக்கான (ride-hailing) ஏறும் இடங்கள், பேருந்து இணைப்பு வசதிகள் மற்றும் வாடகை கார் சேவை மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இனி வரும் மாதங்களில் இந்த ரயில் கட்டமைப்பு முழுவதும் மேலும் பல வாடகை கார் சேவை நிறுவனங்கள் இணைக்கப்படும் என்றும் எத்திஹாத் ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த விரிவாக்க நடவடிக்கையானது ஒருங்கிணைந்த போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் ரயில் பயணத்தை மிகவும் எளிதானதாகவும் வசதியானதாகவும் மாற்றுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel