பிராந்திய பதட்டங்கள் காரணமாக ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த துபாயின் புகழ்பெற்ற பொழுதுபோக்கு இடமான குளோபல் வில்லேஜ், ஏப்ரல் 20 அன்று பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, அஜ்மானில் இருந்து குளோபல் வில்லேஜிற்கு பேருந்து சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.
அஜ்மான் போக்குவரத்துத் துறையானது, அஜ்மானில் உள்ள அல் முசல்லா நிலையத்திலிருந்து குளோபல் வில்லேஜிற்கு வார நாட்களில் இயக்கப்படும் மூன்று பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 25 திர்ஹாம் ஆகும்.
இந்தப் பேருந்துகள் பின்வரும் நேரங்களில் இயக்கப்படுகின்றன:
புறப்படும் நேரம்
- பிற்பகல் 2.15 மணி
- மாலை 4.45 மணி
- மாலை 6.15 மணி
திரும்பும் நேரம்
- பிற்பகல் – 3.45 மணி
- இரவு 10.30 மணி
- நள்ளிரவு 12.30 மணி
குளோபல் வில்லேஜ் தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும். இந்த பொழுதுபோக்கு இடத்தின் 30வது பதிப்பு மே 10, 2026 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.