ADVERTISEMENT

அபுதாபி: ஈத் அல் அதாவை முன்னிட்டு இலவச பார்க்கிங் மற்றும் டோல் கேட் கட்டண விலக்கு அறிவிப்பு!!

Published: 22 May 2026, 8:54 PM |
Updated: 22 May 2026, 8:54 PM |
Posted By: Menaka

ஈத் அல் அதா (Eid Al Adha) விடுமுறை நாட்களான மே 25, திங்கள் முதல் மே 29, வெள்ளி வரை அபுதாபியில் பொது பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்று Q Mobility நிறுவனம் அறிவிக்த்துள்ளது. வழக்கமான பார்க்கிங் கட்டணங்கள் மே 30, சனிக்கிழமை முதல் மீண்டும் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் ஏற்கனவே இலவசமாக உள்ளதால், ஈத் விடுமுறை காலத்தில் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு இலவச பொது பார்க்கிங் வசதியைப் பெறுவார்கள்.

இருப்பினும், மல்டி ஸ்டோரீ வாகன நிறுத்த வசதிகள் (multi-storey parking facilities) விடுமுறை நாட்கள் முழுவதும், நாளின் 24 மணி நேரமும் வழக்கமான கட்டணங்களுடனேயே தொடர்ந்து செயல்படும் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

‘Darb’ டோல் கேட்களில் கட்டணம் இல்லை

ஈத் அல் அதா பண்டிகையின்போது, அபுதாபியில் உள்ள பெரும்பாலான ‘Darb’ சுங்க வாயில்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதையும் Q Mobility உறுதிப்படுத்தியுள்ளது. கட்டணம் இல்லாத வாயில்கள் பின்வருமாறு:

  • சாஸ் அல் நக்ல் (Sas Al Nakhl)
  • அல் மக்தா (Al Maqta’)
  • ராப்தான் (Rabdan)
  • அல் சாதியத் (Al Saadiyat)

இருப்பினும், பின்வரும் டோல் கேட்கள் வழக்கம் போலவே தொடர்ந்து செயல்படும் என்றும், இவற்றை ஒவ்வொரு முறை கடக்கும்போதும் 4 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  • அல் குர்ம் (Al Qurm)
  • கன்தூத் (Ghantoot)

இந்த இரண்டு வாயில்களும் வாரத்தின் ஏழு நாட்களும், நாளின் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் உரிமம் வழங்கும் சேவைகள்

இதற்கிடையில், அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள ‘வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்’ (Customer Happiness Centres), ஈத் விடுமுறை காலத்தில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மையங்கள் மூடப்பட்டிருந்தாலும், குடியிருப்பாளர்கள் பின்வரும் வழிகள் மூலம் தொடர்ந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்:

  • Q Mobility-இன் அதிகாரப்பூர்வ இணையதளம்
  • ‘Darb’ செயலி (App)
  • ‘TAMM’ டிஜிட்டல் தளம்

அதேபோல், அபுதாபி மற்றும் அய்ன் ஆகிய இரு நகரங்களிலும் உள்ள ஓட்டுநர் உரிமம் வழங்கும் மையங்கள் (இதில் Al Ain நகரில் உள்ள பிரதான ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் மையமும் அடங்கும்), மே 25 முதல் மே 31 வரை மூடப்பட்டிருக்கும் என்றும், ஜூன் 1 முதல் அவற்றின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்றும் Q Mobility மேலும் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel