ADVERTISEMENT

UAE: 12,536 தொழிலாளர்களுக்கு 309 மில்லியன் திர்ஹம் பெற்றுத் தந்த அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம்.!!

Published: 3 May 2026, 1:43 PM |
Updated: 3 May 2026, 1:43 PM |
Posted By: Menaka

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 12,536 தொழிலாளர்களுக்கு 309 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் (84.1 மில்லியன் டாலர்) அதிகமான நிதி உரிமைகளை, அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் பெற்றுத்தந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. இது அதன் நீதித்துறை மற்றும் அமலாக்க அமைப்புகளின் சிறந்த செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, வணிகப் போட்டித்தன்மையை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட சட்டக் கட்டமைப்புகள் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகளை, அபுதாபி நீதிமன்றத்தின் விரைவான தீர்ப்பு பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மே 1 அன்று சர்வதேச தொழிலாளர் தினத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், தகராறுகளை விரைவாகத் தீர்ப்பதிலும், தொழிலாளர்கள் தங்களுக்குரிய உரிமைகளை உரிய நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதிலும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு சமநிலையைப் பேணுவதிலும் நீதிமன்றத்தின் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT

இந்த குறிப்பிடத்தக்க பதிவைத் தொடர்ந்து, தகவல்களை விரைவாகத் தீர்ப்பதற்கும், சட்டத்தை வெளிப்படையாக அமல்படுத்துவதன் மூலம் ஒப்பந்த உறவுகளில் இரு தரப்பினரையும் பாதுகாப்பதற்கும் தனது மேம்பட்ட நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளே காரணம் என்று நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

தொழிலாளர் சட்டங்கள் சீராகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதன் மூலம், நீதிமன்றம் வணிக நிலைத்தன்மைக்கு பங்களிப்பதோடு, உலகளாவிய பொருளாதார மையமாக அபுதாபியின் நிலையையும் வலுப்படுத்துகிறது.

ADVERTISEMENT

இந்த முன்னெடுப்புகள், சமநிலையான, நீடித்த பணிச்சூழலை ஊக்குவிக்கும் அதே வேளையில், தேசிய வளர்ச்சியில் தொழிலாளர்களை முக்கியப் பங்காளர்களாக வலுவூட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel