ADVERTISEMENT

அமீரகத்தில் மத்திய கிழக்கின் முதல் ஸ்பியர் (Sphere) அரங்கம்.. 1.7 பில்லியன் டாலர் மெகா திட்டம் 2029-ல் நிறைவடையும் எனத் தகவல்!!

Published: 16 May 2026, 9:39 AM |
Updated: 16 May 2026, 9:45 AM |
Posted By: Menaka

உலகப் புகழ்பெற்ற பொழுதுபோக்கு அடையாளமான ஸ்பியர் (Sphere) மையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரவிருக்கிறது. ஆம், அமெரிக்காவிற்கு வெளியே முதல் ஸ்பியர் அரங்கம் அபுதாபியில் அமையவுள்ளது.

ADVERTISEMENT

இந்த எதிர்கால பொழுதுபோக்கு அடையாளச் சின்னம், யாஸ் மால் மற்றும் சீவேர்ல்ட் அபுதாபிக்கு இடையில் யாஸ் ஐலேண்டில் அமையவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன. இது அமீரகத்தின் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு மற்றொரு முக்கிய ஈர்ப்பைச் சேர்க்கும்.

2023-ல் லாஸ் வேகாஸில் திறக்கப்பட்ட உலகின் முதல் ஸ்பியர் மையத்தால் ஈர்க்கப்பட்டு, ஸ்பியர் அபுதாபி அதிநவீன தொழில்நுட்பத்தை ஆழ்ந்த கதைசொல்லல் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அனுபவங்களுடன் இணைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு சுமார் 1.7 பில்லியன் டாலர் செலவாகும் எனவும், 2029-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதன் கட்டுமான நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த அரங்கம் பசுமையான நிலப்பரப்புகளால் சூழப்பட்டிருக்கும் என்றும், யாஸ் ஐலேண்டின் பிரபலமான தீம் பார்க் மற்றும் ஈர்ப்புகளுக்கு அருகில் அமைந்திருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது இதனை ஒரு முக்கிய உலகளாவிய சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைவர் முகமது கலீஃபா அல் முபாரக் அவர்கள் பேசுகையில், இந்த முதலீடு, ஒரு உலகளாவிய கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு மையமாகத் தனது நிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற அபுதாபியின் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஸ்பியர் அபுதாபியானது, எமிராட்டி கலாச்சாரம், திறமை மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றை சர்வதேச பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்த ஒரு தளமாகவும் செயல்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஸ்பியர் அபுதாபிக்குள் என்ன எதிர்பார்க்கலாம்..??

இந்த இடம் மூன்று முக்கிய வகையான நிகழ்வுகளை நடத்தும்:

  • பல புலன்வழி கதைசொல்லலைக் (multi-sensory storytelling) கொண்ட வித்தியாசமான அனுபவங்கள்
  • பிராந்திய மற்றும் சர்வதேச தொடர் இசை நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு, மாநாடுகள் மற்றும் உலகளாவிய தயாரிப்பு வெளியீடுகள் உள்ளிட்ட முக்கிய நேரலை நிகழ்வுகள்

எமிராட்டி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் பிரத்யேக அனுபவங்களும் திட்டங்களில் அடங்கும். அதே நேரத்தில், உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள், இந்த இடத்தின் பிரம்மாண்டமான கோள வடிவ LED வெளிப்புறமான எக்ஸோஸ்பியரில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் வேகாஸில் உள்ளதைப் போலவே, ஸ்பியர் அபுதாபியும் செயல்படத் தொடங்கியவுடன் 20,000 பார்வையாளர்களைக்கு இடமளிக்கும் என்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாபெரும் திட்டம், அபுதாபியில் உள்ள சாதியாத் கல்ச்சுரல் டிஸ்ட்ரிக்ட் மற்றும் வரவிருக்கும் டிஸ்னி தீம் பார்க் ரிசார்ட் யாஸ் ஐலேண்ட் உள்ளிட்ட மற்ற முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுடன் இணைந்து, யாஸ் ஐலேண்டை உலகின் முன்னணி பொழுதுபோக்குத் தலங்களில் ஒன்றாக மேலும் உருமாற்றுகிறது. இது திறக்கப்படும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel