ADVERTISEMENT

மூன்று ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்ட அமீரகம்..

Published: 18 May 2026, 9:38 AM |
Updated: 18 May 2026, 10:37 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகமானது மேற்கு எல்லையில் இருந்து நேற்று (மே 17) மூன்று ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் இரண்டு வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மூன்றாவது ட்ரோன் அல் தஃப்ரா பகுதியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் அருகே உள்ள ஒரு மின்சார ஜெனரேட்டரைத் தாக்கியது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களின் மூலத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அவை முடிந்தவுடன் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க ஆயுதப்படைகள் முழு எச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் உறுதியாக எதிர்கொள்வோம் என்றும், அதன் இறையாண்மை, ஸ்திரத்தன்மை, தேசிய நலன்கள் மற்றும் மூலோபாய சொத்துக்களைத் தொடர்ந்து பாதுகாப்போம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT