ADVERTISEMENT

அமீரக வானிலை: வெப்பநிலை 47°C வரை உயரும்!! தூசி வீசும் எனவும் எச்சரிக்கை.

Published: 12 Jun 2026, 11:39 AM |
Updated: 12 Jun 2026, 11:39 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் நாட்களில் வெப்பமான மற்றும் பொதுவாகச் சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், நாட்டின் உள் பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகபட்சமாக 47°C வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை (வெள்ளிக்கிழமை) வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும், அதே வேளையில் கிழக்குப்பகுதிகளில் சில தாழ்வான மேகங்கள் உருவாகக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தொடர்ந்து இன்று இரவு மற்றும் சனிக்கிழமை காலை வேளைகளில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால், சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி மற்றும் பனிமூட்டம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் லேசானது முதல் மிதமான காற்று வீசும். குறிப்பாக மேற்குப் பகுதிகளில் அவ்வப்போது காற்று வலுவடைந்து தூசியைக் கிளப்பக்கூடும். திறந்தவெளிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ வரை எட்டக்கூடும் என்று NCM எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், பகல்நேர வெப்பநிலை கடலோரப் பகுதிகளில் 36°C முதல் 42°C வரையிலும், உட்புற பகுதிகளில் 43°C முதல் 47°C வரையிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மலைப்பகுதிகளில் வெப்பநிலை 32°C முதல் 37°C வரை பதிவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களை எதிர்நோக்குகையில், வானிலை பெரும்பாலும் சீராக இருக்கும், இருப்பினும் கிழக்குப்பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் காணப்படலாம் என்று NCM வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதமான சூழல் நீடிக்கும் மற்றும் மூடுபனி மற்றும் பனிமூட்டம் உருவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று காற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கடல் பகுதியில் காற்று வலுவாக இருப்பதால், அரேபிய வளைகுடாவில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பான சூழல் நிலவக்கூடும். இருப்பினும், வெப்பநிலை பருவத்திற்கேற்றவாறு அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்தநாளான செவ்வாய்க்கிழமையன்று வெப்பநிலையில் சற்று சரிவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது கடுமையான கோடை வெப்பத்திலிருந்து ஓரளவு நிவாரணம் அளிக்கும். மேலும், வடமேற்குத் திசையிலிருந்து வீசும் புதிய காற்றினால் திறந்தவெளிகளில் தூசி எழும்பக்கூடும். அதே வேளையில் அரேபிய வளைகுடாவில் கடல் நிலை சீற்றமாகவோ அல்லது மிதமான நிலையிலோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel