துபாய் என்றாலே, வானளாவிய கட்டிடங்களும் உலகப் புகழ்பெற்ற வணிக வளாகங்களும்தான் (malls) பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும். உலகின் மிகப்பெரிய வணிக மையங்களில் சிலவற்றைக் கொண்டுள்ள இந்நகரம், ஏற்கனவே எண்ணற்ற ஷாப்பிங், உணவு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்குகிறது. இருப்பினும், துபாயின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து, புதிய குடியிருப்புப் பகுதிகள் உருவாகி வருவதால், மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் ஷாப்பிங், உணவு மற்றும் பொழுதுபோக்கைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை மேம்பாட்டாளர்கள் விரைவுபடுத்துகின்றனர். இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் அமீரகம் முழுவதும் ஒன்பது புதிய வணிக வளாகங்கள் திறக்கப்படவுள்ளன.
வரவிருக்கும் இந்த சில்லறை வர்த்தக மையங்கள் நாத் அல் ஷபா, சோபா ஹார்ட்லேண்ட், லிவான், தி வில்லா, துபாய் சவுத், காஃப் வூட்ஸ் மற்றும் துபாய் க்ரீக் ஹார்பர் ஆகிய பகுதிகளில் அமையவுள்ளன. இவை சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் முதல் ஆரோக்கிய மையங்கள், ஜிம் வசதிகள் மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு வரை அனைத்தையும் வழங்கும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
1. தி கிராண்ட், நாத் அல் ஷீபா கார்டன்ஸ்
பார்வையாளர்களை வரவேற்கும் முதல் திட்டம் தி கிராண்ட் ஆகும், இது ஆகஸ்ட் 19 அன்று படிப்படியாகத் திறக்கப்படுகிறது. முழுமையாகக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள இந்த சமூக மையத்தில் சில்லறை விற்பனைக் கடைகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சுகாதார வசதிகள் மற்றும் வாழ்க்கை முறை சேவைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம், நாட் அல் ஷேபாவில் உள்ள முதல் வெயிட்ரோஸ் & பார்ட்னர்ஸ் சூப்பர்மார்க்கெட்டை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும்.
முதல் கட்டத்தில் வெயிட்ரோஸ், எம்எம்ஐ, ஹார்ட் காட்டேஜ் லேன், மேப்பிள் பியர் நர்சரி, அல் ஜாபர் ஆப்டிகல் மற்றும் ஃபிக்ஸ்பர்ட்ஸ் ஆகியவை திறக்கப்படும். டாஷாஸ், சம்வேர், ஹோம் பேக்கரி, கொக்கோரோ, ப்ளூ பிஸ்ஸேரியா, பேக் மை டே, டைமா, ஸ்டேவெல் பார்மசி மற்றும் டிப்ஸ் & டோஸ் ஆகியவை செப்டம்பர் தொடக்கத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கன் ஹாஸ்பிடல் மற்றும் ஃபிட்கோட் ஆகியவை 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
2. சோபா மால், சோபா ஹார்ட்லேண்ட்
சோபா ரியாலிட்டி நிறுவனம் தனது முதல் சில்லறை வர்த்தக வளாகமான சோபா மாலில் 210 மில்லியன் திர்ஹாம் முதலீடு செய்கிறது. இது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
339,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வணிக வளாகம், ‘Sobha Hartland’ குடியிருப்பாளர்கள் மற்றும் அண்டை பகுதி மக்களுக்குச் சேவை செய்யும் வகையில் 35 சில்லறை விற்பனைக் கடைகள், 10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், ஒரு சூப்பர் மார்க்கெட், ஜிம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்ளரங்க பொழுதுபோக்கு மண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
3. லே மேரியம் மால், லிவான்
வாடி அல் ச ஃபா 2 பகுதியில் அமைந்துள்ள ‘Le Meryeme Mall’, நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
113,674 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தத் திட்டத்தில் கடைகள், உணவகங்கள், கஃபேக்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட வெளிப்புறப் பகுதிகள் மற்றும் நீச்சல் குளம் ஆகியவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஓய்வு, உணவு மற்றும் உள்ளூர் ஷாப்பிங் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஸ்பானிஷ் பாணியிலான வடிவமைப்பு இதில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4. லே மேரியம் மால், தி வில்லா
வாடி அல் ச ஃபா 5-இல் உள்ள தி வில்லா குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இரண்டாவது ‘Le Meryeme’ திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த 124,000 சதுர அடி வணிக வளாகத்தில், சில்லறை விற்பனைக் கடைகள், குடும்ப உணவகங்கள், நல்வாழ்வு வசதிகள் மற்றும் உள்ளரங்க-வெளிப்புற அனுபவங்களை இணைக்கும் வகையிலான பொது இடங்கள் ஆகியவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
5. சவுத் பே மால், துபாய் சவுத்
துபாய் சவுத்தின் வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிக்குச் சேவை அளிக்கும் வகையில், சவுத் பேஏரியை (lagoon) நோக்கியவாறு 200,000 சதுர அடி பரப்பளவில் சவுத் பே மால் எனும் ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையம் அமையவுள்ளது.
இத்திட்டத்தில் 60 சில்லறை விற்பனைக் கடைகள், இரண்டு முக்கிய பெரிய கடைகள் (anchor stores), உயர்தர ரெஸ்டாரன்ட், மொட்டை மாடி பொழுதுபோக்கு இடங்கள், கிளப்ஹவுஸ், ஜிம், ஸ்பா மற்றும் மருத்துவ மையம் ஆகியவை இடம்பெறவுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ திறப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
6. HAYAT கம்யூனிட்டி மால்
அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உருவாக்கப்படும் 10 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான புதிய குடியிருப்புத் திட்டமான HAYAT-இன் ஒரு பகுதியாக, பிரத்யேக சில்லறை விற்பனைப் பாதை மற்றும் சமூக வணிக வளாகம் (community mall) ஆகியவை அமையும்.
இத்திட்டத்தில் கடைகள், கஃபேக்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுடன் பூங்காக்கள், நடைபாதைகள், ஏரிகள் (lagoons), உடற்பயிற்சி வசதிகள் மற்றும் சுமார் 2,500 வீடுகள் ஆகியவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆரம்பக்கட்டப் பணிகள் 2028-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் புதிய மால்
மஜித் அல் ஃபுத்தைம் நிறுவனம், துபாய் சவுத்தில் 62 பில்லியன் திர்ஹாம் மதிப்பிலான கலப்புப் பயன்பாட்டு சமூகத்தின் ஒரு பகுதியாக ஒரு பெரிய வணிக வளாகத்தையும் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மால், புதிய மேம்பாட்டுத் திட்டத்தின் சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கின் மையமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் பெயர், அளவு மற்றும் திறப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
8. காஃப் வூட்ஸ் மால் (Ghaf Woods Mall)
மஜித் அல் ஃபுத்தைன் 15.4 பில்லியன் திர்ஹாம் மதிப்பிலான காஃப் வூட்ஸ் சமூகத்திற்குள் அமைந்துள்ள, இயற்கையால் ஈர்க்கப்பட்ட இந்த மால், 30,000-க்கும் மேற்பட்ட மரங்களுக்கு மத்தியில் ஷாப்பிங், உணவு மற்றும் பொழுதுபோக்கை ஒருங்கிணைக்கும் என்று கூறப்படுகிறது.
பாரம்பரியமான மூடப்பட்ட மால் கான்செப்ட்டை விட, வெளிப்புற வாழ்க்கை மற்றும் நல்வாழ்வை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இது, கட்டி முடிக்கப்பட்டதும், இந்த நிறுவனத்தின் 30-வது வணிக வளாகமாக மாறும்.
9. துபாய் ஸ்கொயர், துபாய் க்ரீக் ஹார்பர்
நகரின் மிகவும் லட்சியமிக்க சில்லறை வர்த்தகத் திட்டங்களில் ஒன்றான துபாய் ஸ்கொயர், துபாய் க்ரீக் ஹார்பரில் திட்டமிடப்பட்டுள்ள, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையமாகும்.
சுமார் 2.6 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகத்தில், சில்லறை வர்த்தகம், உணவகங்கள் மற்றும் ஆழ்ந்த பொழுதுபோக்கு அனுபவங்கள் இடம்பெறும். மேலும் இது, திட்டமிடப்பட்டுள்ள துபாய் க்ரீக் டவருடன் நேரடியாக இணைக்கப்படும். இந்தத் திட்டம் 2028-ல் திறக்கப்படும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மேம்பாடுகளுடன், துபாயின் புகழ்பெற்ற வணிக மையங்களும் விரிவடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், உலகப் புகழ்பெற்ற துபாய் மால், 1.5 பில்லியன் திர்ஹாம் மதிப்பிலான விரிவாக்கப் பணிகளுக்கு உட்பட்டுள்ளது. இதன் மூலம் 240 ஆடம்பர சில்லறை விற்பனை மற்றும் உணவகங்கள் புதிதாகச் சேர்க்கப்படும். அதே நேரத்தில், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், 5 பில்லியன் திர்ஹாம் முதலீடு செய்து ஒரு பெரிய மறுசீரமைப்புப் பணியை மேற்கொள்கிறது. இதன் மூலம் 100 புதிய கடைகள், விரிவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட வெளிப்புற உணவகப் பகுதி ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். இப்பகுதி 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel