ADVERTISEMENT

துபாயில் வெறும் 964 திர்ஹமுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கியவருக்கு 2-BHK அபார்ட்மெண்ட் பரிசு!! அடித்தது அதிர்ஷ்டம்!

Published: 31 Aug 2026, 9:03 AM |
Updated: 31 Aug 2026, 9:06 AM |
Posted By: Menaka

துபாயில் சொந்த வீடு வாங்குவது என்பது அங்கு வசிக்கும் பலருக்கும் நீண்ட நாள் கனவாக உள்ளது. இப்படியான நிலையில், துபாயில் நீங்கள் செலவு செய்த சிறிய தொகைக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை பரிசாகக் கொடுத்தால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவீர்கள் இல்லையா?

ADVERTISEMENT

உண்மையில், துபாயைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர், மளிகைப் பொருட்களுக்காக வெறும் 964 திர்ஹம் செலவழித்து, இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட்டை பரிசாக வென்றுள்ளார்.

துபாயின் ‘Win Your Home in Dubai’ (துபாயில் உங்கள் வீட்டை வெல்லுங்கள்) பிரச்சாரத்தின் இறுதி குலுக்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்த முகமது சல்மான் மசூத் அவர்களுக்கு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிரிஸ் ஃபேட் (Kris Fade) இடமிருந்து எதிர்பாராத அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஆரம்பத்தில், தான் என்ன பரிசை வென்றோம் என்பதை சல்மான் உணர்ந்துகொள்ளவே இல்லை. உணவுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்த அவருக்கு, அந்த அழைப்பு வந்தபோது அவர் பணியில் இருந்தார். மே 27 அன்று யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் (Union Cooperative) சூப்பர் மார்க்கெட்டில் 964 திர்ஹம் மதிப்பிலான பொருட்கள் வாங்கியதற்கான ரசீது மூலமாகவே அவர் இந்தப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்ட ஐந்து நாட்களிலேயே வாங்கப்பட்ட அந்தப் பொருட்களே, இறுதியில் அப்பிரச்சாரத்தின் மிகப்பெரிய பரிசான அல் ஜடாஃப் (Al Jaddaf) பகுதியில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட்டாக மாறியது.

ADVERTISEMENT

மளிகைப் பொருட்கள் வாங்கிய ரசீது முதல் புதிய வீடு வரை

மே 22 அன்று தொடங்கப்பட்ட இந்தப் பொருட்கள் வாங்கும் பிரச்சாரத்தின் நிறைவாக, ஞாயிற்றுக்கிழமையன்று துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியில் இறுதி குலுக்கல் நடைபெற்றது.

இத்திட்டத்தில் பங்கேற்ற கடைகளில் 500 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழித்த வாடிக்கையாளர்கள், 12 வீடுகளில் (11 ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்கள் மற்றும் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு பிரம்மாண்ட பரிசு வீடு) ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற தங்கள் கொள்முதலைப் பதிவு செய்துகொள்ள முடிந்தது.

இவ்வாறு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு சாதாரண மளிகைப் பொருட்கள் வாங்கிய ரசீதாகத் தொடங்கிய ஒன்று, சல்மானுக்கு இப்போது துபாயில் ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ளும் வாய்ப்பாக மாறியுள்ளது. இந்த எதிர்பாராத பெரும் பரிசை அறிவித்தத்தில் இருந்து தான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக சல்மான் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel