ஷார்ஜாவில் உள்ள ஷேக் கலீஃபா பின் சையத் சாலை மற்றும் மலிஹா சாலை இன்டர்செக்ஷனில், சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் வாகன ஓட்டிகள் தற்காலிகப் போக்குவரத்து மாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.
இந்த போக்குவரத்து மாற்றமானது டிசம்பர் 6, 2026 வரை அமலில் இருக்கும் என்று ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) தெரிவித்துள்ளது.
இப்பணிகள், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதையும், ஷார்ஜாவின் சாலைக் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இண்டர்செக்ஷன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி என்று ஆணையம் கூறியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து மாற்ற வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பின்பற்றுமாறும், தற்காலிகப் போக்குவரத்துச் சின்னங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இப்பகுதி வழியாகச் செல்லும்போது கூடுதல் பயண நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் நீக்கப்படும் வரை, வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறும், தற்காலிக ஏற்பாடுகளைப் பின்பற்றுமாறும் SRTA வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel