ADVERTISEMENT

அமீரகத்திலிருந்து இந்தியா, வளைகுடா நாடுகளுக்கான விமானங்கள் ரத்து மற்றும் தாமதம்: சுமார் 20 சேவைகள் பாதிப்பு!!

Published: 4 Sep 2026, 3:31 PM |
Updated: 4 Sep 2026, 3:31 PM |
Posted By: Menaka

கடந்த இரண்டு நாட்களாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா மற்றும் பிற பிராந்திய இடங்களுக்குச் செல்லும் பயணிகள் விமானச் சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களில் சுமார் 20 விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வியாழக்கிழமையன்று கிடைத்த விமானச் சேவைத் தகவல்களின்படி, வளைகுடா நாடுகள், இந்தியா மற்றும் பிற பிராந்திய இடங்களுக்கான பல சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகியுள்ளன.

துபாயிலிருந்து இயக்கப்படும் விமானங்கள்

கடந்த இரண்டு நாட்களில் துபாய்க்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பல விமானங்கள் தாமதமாயின அல்லது ரத்து செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ப்ளைடுபாய்/எமிரேட்ஸ்:

  • நியோம் செல்லும் FZ932 – சுமார் இரண்டு மணி நேரம் தாமதம்
  • FZ910 மற்றும் EK2335 – கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தாமதம்
  • டமாஸ்கஸ் செல்லும் FZ1848 – 44 நிமிடங்கள் தாமதம்
  • பாக்தாத் செல்லும் FZ202 – 50 நிமிடங்கள் தாமதம்
  • கெய்ரோ செல்லும் EK928 – கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் தாமதம்
  • காபூல் செல்லும் FZ308 மற்றும் EK2178 – கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதம்

ஸ்பைஸ்ஜெட்:

ADVERTISEMENT
  • மும்பை செல்லும் SG5113 – வியாழக்கிழமை அன்று ரத்து செய்யப்பட்டது
  • புது தில்லி செல்லும் SG5106 – சுமார் 50 நிமிடங்கள் தாமதம்
  • புனேவிலிருந்து வரும் SG052 – புதன்கிழமை அன்று ரத்து செய்யப்பட்டது
  • கொச்சி செல்லும் SG5118 – கிட்டத்தட்ட 16 மணி நேரம் தாமதம்; புறப்படும் நேரம் UAE நேரப்படி அதிகாலை 3:15-லிருந்து மாலை 7:12-க்கு மாற்றப்பட்டது

பிற விமான நிறுவனங்கள்:

  • புது தில்லி செல்லும் ஏர் இந்தியா AI4309 – 57 நிமிடங்கள் தாமதம்
  • ஈரான் ஏர்டூர் B99720 – ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம்

அபுதாபி விமானங்கள்

அபுதாபியிலிருந்து புறப்படும் பல விமானங்களும் பாதிக்கப்பட்டன.

  • டெல்லியிலிருந்து வரும் Etihad EY213 – கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதம்
  • திபிலிசி செல்லும் ஏர் அரேபியா 3L715 – 54 நிமிடங்கள் தாமதம்
  • தாஷ்கண்ட் செல்லும் ஏர் அரேபியா 3L764 – ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம்
  • திருச்சிராப்பள்ளியிலிருந்து வரும் இண்டிகோ 6E1439 – 19 நிமிடங்கள் தாமதம்

ஷார்ஜாவிலிருந்து பஹ்ரைன் மற்றும் குவைத்திற்கான விமானங்கள்

ஷார்ஜாவைச் சேர்ந்த ‘ஏர் அரேபியா’ (Air Arabia) நிறுவனம், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பஹ்ரைனுக்கான G9107 மற்றும் குவைத்திற்கான G9068 மற்றும் G9124 ஆகிய விமானச் சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

பஹ்ரைன் மற்றும் குவைத்திற்கான G9101, G9103, G9105 மற்றும் G9121 உள்ளிட்ட பிற விமானங்கள் தொடர்ந்து இயங்கினாலும், குறிப்பிட்ட சில சேவைகளை மட்டும் இந்த நிறுவனம் சில வாரங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

இவ்வாறு விமான நேரங்கள் திடீரென மாறக்கூடும் என்பதால், விமான நிலையத்திற்குச் செல்லும் முன் பயணிகள் தங்கள் விமானத்தின் நிலையை (flight status) விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்திடம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel