ADVERTISEMENT

வெறும் 213 திர்ஹம்ஸில் புதிய iPhone 18 Pro! அமீரகத்தில் முன்பதிவு தொடக்கம்.. du, Etisalat வெளியிட்ட தவணைத் திட்டங்கள்!!

Published: 14 Sep 2026, 10:49 AM |
Updated: 14 Sep 2026, 10:49 AM |
Posted By: Menaka

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் வெளியீடு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமீரகத்தில் புதிய iPhone 18 pro மற்றும் pro max மாடல்களுக்கான முன்பதிவுகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் இந்தப் புதிய மாடல்களைப் பெற முண்டியடித்து வரும் நிலையில், ‘du’ மற்றும் ‘Etisalat’ நிறுவனங்கள் பல்வேறு தவணைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றின் விலை 5,099 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குகிறது. இதில் கட்டணங்களை 24 மாதங்கள் வரை பிரித்துச் செலுத்தலாம்.

ADVERTISEMENT

புதிய pro மாடல்கள் கருப்பு (black), வெள்ளி (silver), கிளேசியர் (glacier) மற்றும் புதிய பர்கண்டி (burgundy) ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றில் 256GB முதல் 2TB வரையிலான சேமிப்புத் திறன் (storage) விருப்பங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரண்டு மாடல்களிலும் A20 Pro சிப், மேம்படுத்தப்பட்ட ‘டைனமிக் ஐலேண்ட்’ (Dynamic Island) மற்றும் சீரான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை ‘வேப்பர் சேம்பர்’ (vapour chamber) தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

iPhone 18 Pro: du தவணை முறைத் திட்டங்கள்

சேமிப்புத் திறன்12 மாதங்கள்24 மாதங்கள்
256GBDh426/மாதம் + VAT213 திர்ஹம்ஸ்/மாதம் + VAT
512GB496 திர்ஹம்ஸ்/மாதம் + VAT248 திர்ஹம்ஸ்/மாதம் + VAT
1TB640 திர்ஹம்ஸ்/மாதம் + VAT320 திர்ஹம்ஸ்/மாதம் + VAT
2TB856 திர்ஹம்ஸ்/மாதம் + VAT428 திர்ஹம்ஸ்/மாதம் + VAT

iPhone 18 Pro: Etisalat திட்டங்கள்

சேமிப்புத் திறன்6 மாதங்கள்12 மாதங்கள்18 மாதங்கள்24 மாதங்கள்ஒரே முறை கட்டணம்
256GB850 திர்ஹம்ஸ்448 திர்ஹம்ஸ்299 திர்ஹம்ஸ்225 திர்ஹம்ஸ்5,099 திர்ஹம்ஸ்
512GB992 திர்ஹம்ஸ்534 திர்ஹம்ஸ்361 திர்ஹம்ஸ்273 திர்ஹம்ஸ்5,949 திர்ஹம்ஸ்
1TB1,275 திர்ஹம்ஸ்687 திர்ஹம்ஸ்464 திர்ஹம்ஸ்351 திர்ஹம்ஸ்7,649 திர்ஹம்ஸ்
2TB1,700 திர்ஹம்ஸ்915 திர்ஹம்ஸ்618 திர்ஹம்ஸ்469 திர்ஹம்ஸ்10,199 திர்ஹம்ஸ்

iPhone 18 Pro Max: du தவணை முறைத் திட்டங்கள்

சேமிப்பு12 மாதங்கள்24 மாதங்கள்
256GB458 திர்ஹம்ஸ்/மாதம் + VAT229 திர்ஹம்ஸ்/மாதம் + VAT
512GB530 திர்ஹம்ஸ்/மாதம் + VAT265 திர்ஹம்ஸ்/மாதம் + VAT
1TB674 திர்ஹம்ஸ்/மாதம் + VAT337 திர்ஹம்ஸ்/மாதம் + VAT
2TB888 திர்ஹம்ஸ்/மாதம் + VAT444 திர்ஹம்ஸ்/மாதம் + VAT

iPhone 18 Pro Max: Etisalat திட்டங்கள்

சேமிப்பு6 மாதங்கள்12 மாதங்கள்18 மாதங்கள்24 மாதங்கள்ஒரே முறை கட்டணம்
256GB917 திர்ஹம்ஸ்480 திர்ஹம்ஸ்321 திர்ஹம்ஸ்240 திர்ஹம்ஸ்5,499 திர்ஹம்ஸ்
512GB1,059 திர்ஹம்ஸ்570 திர்ஹம்ஸ்385 திர்ஹம்ஸ்292.01 திர்ஹம்ஸ்6,349 திர்ஹம்ஸ்
1TB1,342.01 திர்ஹம்ஸ்722 திர்ஹம்ஸ்488 திர்ஹம்ஸ்370 திர்ஹம்ஸ்8,049 திர்ஹம்ஸ்
2TB1,767 திர்ஹம்ஸ்951 திர்ஹம்ஸ்642 திர்ஹம்ஸ்487 திர்ஹம்ஸ்10,599 திர்ஹம்ஸ்

மேலும், இச்சாதனங்கள் போஸ்ட்பெய்ட் (postpaid) திட்டங்களுடன் முன்பதிவு செய்யக் கிடைக்கின்றன. ஒப்பந்தக் காலம் முடிவதற்கு முன்பே இச்சலுகையை ரத்து செய்தால், மீதமுள்ள ஒவ்வொரு மாதத்திற்கும் ‘முன்கூட்டியே ரத்து செய்வதற்கான கட்டணம்’ (early cancellation fee) விதிக்கப்படலாம் என்பதை du வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

iPhone 18 Pro-வில் என்னென்ன அம்சங்கள் உள்ளன?

‘iPhone 18 Pro’ ஆனது 6.3-அங்குல Super Retina XDR டிஸ்ப்ளே, ProMotion மற்றும் Always-On டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வருகிறது. இது அலுமினியத்தாலான ஒற்றை உடல் அமைப்பு (unibody), ‘ஆக்ஷன் பட்டன்’ (Action Button), ‘கேமரா கண்ட்ரோல்’ (Camera Control) மற்றும் ‘செராமிக் ஷீல்ட் 2’ (Ceramic Shield 2) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மாடல் ஐஃபோன் A20 Pro சிப் மூலம் இயங்குகிறது. இதில் மெயின் (main), அல்ட்ரா-வைட் (ultra-wide) மற்றும் டெலிஃபோட்டோ (telephoto) கேமராக்கள் அடங்கிய 48MP Pro Fusion கேமரா அமைப்பு உள்ளது. மேலும், இதில் 18MP Centre Stage முன்பக்க கேமரா மற்றும் வேகமான சார்ஜிங் (fast charging) வசதியும் உள்ளன.

iPhone 18 Pro Max: பெரிய திரை, நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி

Pro Max மாடலானது பெரிய அளவிலான 6.9-அங்குல Super Retina XDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அத்துடன் இதில் அதே A20 Pro சிப் மற்றும் 48MP Pro Fusion கேமரா அமைப்பும் இடம்பெற்றுள்ளன.

இது 45 மணிநேரம் வரை வீடியோ பார்க்கும் வசதியை (video playback) வழங்குவதாகவும், இதன் மூலம் இந்த வரிசையிலேயே மிக நீண்ட நேரம் உழைக்கும் ஐபோனாக இது திகழ்வதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

iPhone Duo-வின் விலை

Pro மாடல்களின் விலை 5,099 திர்ஹம்ஸ் என்ற விலையில் தொடங்கினாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆப்பிளின் புதிய மடிக்கக்கூடிய (foldable) iPhone Duo-வின் விலை 8,499 திர்ஹம்ஸில் தொடங்குகிறது.

இந்த மடிக்கக்கூடிய ஐபோனில் வெளிப்புறத் திரை மற்றும் விரித்துக்கொள்ளக்கூடிய பெரிய திரை ஆகியவை உள்ளன. மேலும், AI மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் கையாள்வதற்கு (multitasking) ஏற்ற புதிய சிப் ஒன்றும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அமீரகத்தில் இதற்கான முன்பதிவுகள் அக்டோபர் 16-ஆம் தேதியும், விற்பனை அக்டோபர் 23-ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 8,499 திர்ஹம்ஸ் என்ற தொகையில் ஒரு ஸ்மார்ட்போனைத் தாண்டி இன்னும் பல விஷயங்களை வாங்க முடியும்.

ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 485.25 திர்ஹம்ஸ் என்று கணக்கிட்டால், நகை செய்யும் கூலி (making charges) இன்றி, இத்தொகை ஏறக்குறைய 17.5 கிராம் தங்கத்திற்கு சமமாகும்.

அதே தொகையைக் கொண்டு, தலா 1,301 திர்ஹம்ஸ் கட்டணத்தில் துபாய்-ஜெத்தா இடையே ஆறு முறை சென்று திரும்பும் விமானப் பயணங்களையோ அல்லது தலா 1,638 திர்ஹம்ஸ் கட்டணத்தில் துபாய்-மும்பை இடையே ஐந்து முறை சென்று திரும்பும் பயணங்களையோ மேற்கொள்ளலாம்.

வருடத்திற்கு 50,000 திர்ஹம்ஸ் வாடகை செலுத்தும் துபாய்வாசி ஒருவருக்கு, 8,499 திர்ஹம்ஸ் என்பது இரண்டு மாதங்களுக்கும் மேலான வாடகைக்குச் சமமாகும். அதேபோல, மளிகைப் பொருட்களுக்காக மாதத்திற்கு 2,000 திர்ஹம்ஸ் செலவிடும் ஒரு குடும்பத்திற்கு, இத்தொகை நான்கு மாதங்களுக்கும் மேலான உணவுப் பொருட்கள் வாங்குவதற்கான செலவை ஈடுகட்டும்.

ஆப்பிளின் புதிய மடிக்கக்கூடிய (foldable ) மாடல்களின் விலைக்குப் பின்னால் எவ்வளவு பெரிய வாங்கும் திறன் (purchasing power) உள்ளது என்பதை இந்த ஒப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel