ADVERTISEMENT

அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Published: 5 Sep 2026, 9:20 AM |
Updated: 5 Sep 2026, 9:20 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமையன்று வெப்பநிலை படிப்படியாக உயரும் என்றும், நாட்டின் சில கிழக்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வானிலை மையத்தின் கணிப்பின்படி, பெரும்பாலான பகுதிகளில் வானிலை பொதுவாகத் தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ காணப்படும். மேலும், மதிய வேளையில் கிழக்கு பகுதிகளில் வெப்பச்சலனம் சார்ந்த மேகங்கள் (convective clouds) உருவாகி, மழை பெய்வதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.

துபாய் மற்றும் அபுதாபியில் வெப்பநிலை

இதற்கிடையில், துபாய் மற்றும் அபுதாபியில் வெப்பநிலை 42°C-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஷார்ஜாவில் அதிகபட்சமாக 44°C வெப்பநிலை பதிவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இரவு மற்றும் ஞாயிறு காலை வேளைகளில், கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாகவும், லேசான மூடுபனி நிலவவும் வாய்ப்புள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலையானது துபாயில் 33°C, அபுதாபியில் 32°C மற்றும் ஷார்ஜாவில் 31°C ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேகமூட்டமான சூழலில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். தென்கிழக்கு முதல் வடகிழக்கு திசைகளில் மணிக்கு 10 முதல் 25 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இது அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ வேகத்தை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடாப் பகுதியில் கடல் அலைகள் அமைதியாகவோ அல்லது லேசான சீற்றமாகவோ காணப்படும். ஓமன் கடல் பகுதியில் நிலைமை லேசான கொந்தளிப்பு முதல் மிதமான சீற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமீரகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக, அல் அய்ன் (Al Ain) பகுதியின் ஸ்வேஹானில் (Sweihan) பிற்பகல் 3:30 மணிக்கு 46.3°C பதிவானது என்பதையும் NCM அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel