செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 13 அன்று திருத்தப்பட்ட வேக வரம்பு நடைமுறைக்கு வருவதால், ஃபுஜைரா மற்றும் கோர்ஃபக்கான் இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டியிருக்கும்.
ஃபுஜைரா-கோர்ஃபக்கான் சாலையில் வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ-லிருந்து 100 கி.மீ-ஆகக் குறைக்கப்படுவதாக ஃபுஜைரா காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள புதிய வேக வரம்பு அறிவிப்புப் பலகைகளைக் கவனித்து, அதற்கேற்ப தங்கள் வேகத்தை மாற்றியமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஃபுஜைரா காவல்துறை தலைமையகம் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட வேக வரம்பு அக்டோபர் 13 முதல் அமலுக்கு வருகிறது.
எனவே, சாலைப் பயனாளர்கள் அனைவரும் புதிய வேக வரம்பைக் கடைப்பிடிக்குமாறும், அப்பாதையில் உள்ள போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இச்சாலையைப் வழக்கமாகப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது இந்த மாற்றத்தைக் கருத்தில் கொள்ளுமாறும், சாலையில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவிக்கப்பட்டுள்ள வேக வரம்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel