ADVERTISEMENT

UAE: தனியார்துறை ஊழியர்களுக்கான ஈத் அல் அதா விடுமுறை அறிவிப்பு!!

Published: 18 May 2026, 2:25 PM |
Updated: 18 May 2026, 2:32 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அத விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுதுள்ள தனியார் துறைக்கான விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு, ஈத் அல் அதாவை முன்னிட்டு வரும் மே 26, செவ்வாய்க்கிழமை முதல் மே 29, வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்பதை ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

ADVERTISEMENT

இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்கள் 5 நாள் இடைவெளியை அனுபவிக்க உள்ளனர். பண்டிகைகால விடுமுறையுடன் வார இறுதி நாட்களையும் சேர்த்துப் பார்க்கையில், பொதுத்துறை ஊழியர்கள் ஜூன் 1, திங்கட்கிழமை அன்று பணிக்குத் திரும்புவதற்கு முன்பு, மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறையைப் பெறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், ஷார்ஜா அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத்தான் எல்லோரையும் விட மிக நீண்ட விடுமுறை காத்திருக்கிறது. அந்த அமீரகம் நான்கு நாள் பணிவார முறையைப் பின்பற்றுவதாலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களை வார இறுதி நாட்களாகக் கொண்டிருப்பதாலும், அங்குள்ள அரசு ஊழியர்கள் மொத்தம் 10 நாட்கள் கொண்ட மிக நீண்ட விடுமுறையை அனுபவிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதி மற்றும் மிகவும் புனிதமான மாதமான ‘துல் ஹஜ் (Dhul Hijjah) மாத முதல் நாளாக மே 18-ஆம் தேதியை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஹஜ் எனும் புனித பயணத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படும் ‘அரஃபா தினம்’ (Arafah Day), மே 26, செவ்வாய்க்கிழமை அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஈத் அல் அதா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel