ADVERTISEMENT

UAE: இனி வெள்ளிக்கிழமைகளிலும் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்..!! 5800 பார்க்கிங் இடங்களை “Paid Zone” ஆக மாற்றிய ஷார்ஜா..!!

Published: 20 Mar 2021, 12:34 PM |
Updated: 20 Mar 2021, 12:45 PM |
Posted By: admin

ஷார்ஜாவில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் சுமார் 6,000 பார்க்கிங் இடங்கள் தற்பொழுது கட்டண மண்டலங்களின் (Paid Zone) கீழ் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கு வெள்ளிக்கிழமை உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக, வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டண பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பார்க்கிங் இடங்களில் வெள்ளிக்கிழமை உட்பட பொது விடுமுறை நாட்கள் அனைத்திலும் கூட பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா முனிசிபாலிடி இது குறித்து தெரிவிக்கையில், ஆண்டின் அனைத்து நாட்களிலும் 5,857 இடங்களில் பார்க்கிங் கட்டணம் பொருந்தும். நகரம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள “ப்ளூ பார்க்கிங் தகவல் பலகைகள் (blue parking information boards)” வழியாக இந்த பார்க்கிங் இடங்களை அடையாளம் காணலாம் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

எல்லா நேரங்களிலும் குடியிருப்பாளர்களுக்கு பார்க்கிங் இடங்களை கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா அரசின் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் விடுமுறை நாட்களில் பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு முன்பாக அது எந்த வகையான பார்க்கிங் என்பதை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய கட்டண பார்க்கிங் இடங்கள் முதன்முதலில் 2018 இல் அறிவிக்கப்பட்டன. குடியிருப்பாளர்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா முனிசிபாலிடி அப்போது கூறியிருந்தது. முக்கிய பகுதிகளை கட்டணம் செலுத்தும் பார்க்கிங் முறையின் கீழ் கொண்டு வருவது பார்க்கிங் சிக்கல்களைக் குறைக்கும் என்று அவர்கள் கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுமுறை நாட்களில் பிற இடங்களிலிருந்து வந்து தங்கள் கார்களை நீண்ட நேரம் நிறுத்துவதால், இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் வசிப்பவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது கடினமாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.