ADVERTISEMENT

அமீரகத்தின் வானிலை நிலவரம்: ஈத் அல் அதா விடுமுறையின் போது வெப்பநிலை 48ºC வரை உயரும் என கணிப்பு.!!

Published: 25 May 2026, 1:54 PM |
Updated: 25 May 2026, 1:54 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மே 25 முதல் மே 31 வரையிலான ஈத் அல் அதா விடுமுறை காலத்தில், பொதுவாக வெப்பமான வானிலை நிலவும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி, நாட்டின் உட்புறப் பகுதிகள் பகல் நேரங்களில் தொடர்ந்து வெப்பமாகவே இருக்கும் என்றும், அதே வேளையில் கடலோரப் பகுதிகளும் தீவுகளும் ஒப்பீட்டளவில் வெப்பமான சூழலை எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த விடுமுறை வாரம் முழுவதும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை சற்று மிதமான நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், வானம் பெரும்பாலும் தெளிவாகவே இருக்கும் என்றும், சில கிழக்கு மண்டலங்களில் அவ்வப்போது மேகமூட்டம் காணப்படும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடலோரப் பகுதிகளைப் பொறுத்தவரை, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் என்றும், திங்கள் கிழமை மற்றும் வெள்ளி கிழமை ஆகிய நாட்களில் மூடுபனி அல்லது லேசான மூடுபனி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது:

காற்று மற்றும் கடல் நிலவரம்

NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் போக்கு பின்வருமாறு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

ADVERTISEMENT
  • தென்கிழக்கு திசையிலிருந்து வீசி, பின்னர் வடமேற்கு திசைக்கு மாறும்.
  • காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும்.
  • பகல் நேரங்களில் அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரித்து, சில பகுதிகளில் புழுதிப் புயலை (தூசியைப் பறக்கவிடும் சூழலை) உருவாக்கும்.

இதற்கிடையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரு இடங்களிலும் கடல் நிலவரம் அமைதியாகவே (slight) இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை

அதிகபட்ச வெப்பநிலை:

  • கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகள்: 35°C முதல் 43°C வரை
  • உட்புறப் பகுதிகள்: 43°C முதல் 48°C வரை
  • மலைப்பிரதேசங்கள்: 28°C முதல் 35°C வரை

குறைந்தபட்ச வெப்பநிலை:

  • கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகள்: 24°C முதல் 32°C வரை
  • உட்புறப் பகுதிகள்: 19°C முதல் 27°C வரை
  • மலைப்பிரதேசங்கள்: 24°C முதல் 30°C வரை

மேற்கூறியவாறு நாடு முழுவதும் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பகல் நேரங்களில், குறிப்பாக மதிய வேளையில் வெப்பம் உச்சத்தில் இருக்கும்போது, ​​பொதுமக்கள் நீண்ட நேரத்திற்கு நேரடி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறு NCM அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel