ADVERTISEMENT

துபாயில் புதிதாக கட்டப்படும் ஹார்பர் பாலம்: பயண நேரம் 12 நிமிடங்களிலிருந்து 3 நிமிடங்களாகக் குறையும் எனத் தகவல்!!

Published: 8 Jun 2026, 10:08 AM |
Updated: 8 Jun 2026, 10:08 AM |
Posted By: Menaka

எமிரேட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஷேக் சயத் சாலை (Sheikh Zayed Road) மற்றும் துபாய் ஹார்பர் (Dubai Harbour) ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்தை வெகுவாக மேம்படுத்தும் ஒரு முக்கிய பாலத் திட்டத்தின் 90 சதவீதப் பணிகளை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘ஷமல் ஹோல்டிங்’ (Shamal Holding) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் இந்த 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம், இந்த மாதம் முதல், கட்டம் கட்டமாகத் திறக்கப்படவுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் முழுமையான பணிகள் ஜூலை 2026-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயண நேரம் 75% குறையும்

RTAவின் கூற்றுப்படி, இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு வந்ததும், ஷேக் சையத் சாலைக்கும் துபாய் ஹார்பருக்கும் இடையிலான பயண நேரம் 12 நிமிடங்களிலிருந்து வெறும் 3 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, துபாயின் மிக வேகமாக வளர்ந்து வரும் கடலோரப் பகுதிக்குச் செல்வதை எளிதாக்கும் என்றும் ஆணையம் கூறியுள்ளது..

ADVERTISEMENT

ஷேக் சையத் சாலையில் தேரா (Deira) மற்றும் ஜெபல் அலி (Jebel Ali) ஆகிய திசைகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், இந்தப் புதிய பாலத்தின் வழியாக நேரடியாக துபாய் ஹார்பரை அடைய முடியும்.

ஜூலை மாதத்தில் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் போது, ​​துபாய் ஹார்பரை அல் நசீம் ஸ்ட்ரீட் (Al Naseem Street) மற்றும் அருகிலுள்ள சந்திப்புகளுடன் இணைக்கும் கூடுதல் போக்குவரத்துப் பாதைகளும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பாலத்தின் திறன் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தப் பாலம் துபாயில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு (American University in Dubai) அருகிலுள்ள ‘இன்டர்சேஞ்ச் 5’-ல் (Interchange 5) தொடங்கி, துபாய் ஹார்பர் ஸ்ட்ரீட் வரை நீண்டுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • நீளம்: 1,500 மீட்டர்கள்
  • ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள் (lanes)
  • மணிக்கு 6,000 வாகனங்களைக் கையாளும் திறன்
  • ஐந்து பால என்ட்ரி/எக்ஸிட் பாதைகள் (ramps)
  • நான்கு முக்கிய இண்டர்செக்ஷன்களில் மேம்பாட்டுப் பணிகள்

இப்பகுதியின் எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கும் வகையிலும், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானப் பணியில் முக்கிய மைல்கல்

இக்கட்டுமானப் பணியில் 12 குழுக்களாக 1,400-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டதாகவும், எவ்வித விபத்தோ அல்லது பணி இழப்போ (lost-time injury) இன்றி மொத்தம் 4.2 மில்லியன் பணி நேரங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதாகவும் RTA தெரிவித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள்:

  • 45,104 கன மீட்டர் கான்கிரீட்
  • 8,273 டன் எஃகு
  • 254 அடித்தளத் தூண்கள் (foundation piles)
  • 66 பாலத் தூண்கள் (bridge columns)

துபாய் ஹார்பரின் வளர்ச்சியை ஆதரித்தல்

பாம் ஜுமேரா (Palm Jumeirah) மற்றும் ப்ளூவாட்டர்ஸ் ஐலாண்ட் (Bluewaters Island) ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ள துபாய் ஹார்பர், துபாயின் மிக முக்கியமான கடலோர மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். மேலும் இது மத்திய கிழக்கின் மிகப்பெரிய ‘யாட்’ (yacht) படகுத் துறைமுகத்தைக் கொண்டுள்ளது. இப்பகுதி தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதில் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாட்டுத் திட்டம் அடங்கும், இதன் சிறப்பம்சங்கள்:

  • 24 குடியிருப்பு கோபுரங்கள்
  • சுமார் 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள்

இப்புதிய பாலமானது, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, எதிர்கால குடியிருப்பு, சுற்றுலா மற்றும் வணிக வளர்ச்சியை ஆதரிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் இத்திட்டம் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அத்துடன் இப்பகுதியின் முன்னணி கடற்கரை சார்ந்த இடமாக ‘துபாய் ஹார்பர்’ (Dubai Harbour) தொடர்ந்து வளர்ச்சியடைவதை ஆதரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel