ADVERTISEMENT

அமீரகத்தில் 4 நாட்களுக்கு 70 சதவீதம் வரை மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்திருக்கும் அமேசான்..!!

Published: 24 Mar 2021, 4:07 PM |
Updated: 24 Mar 2021, 4:56 PM |
Posted By: admin

இ-காமர்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமான அமேசான் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய விற்பனையை நாளை முதல் துவங்கவிருப்பதாகவும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

“எல்லாம் உங்களுக்கான விற்பனை (Everything For You Sale)” எனும் இந்த விற்பனையானது மார்ச் 25 முதல் 28 வரை amazon.ae -ல் மேற்கொள்ளப்படும் என்றும், அதே நேரத்தில் அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் மார்ச் 24 அன்று காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இந்த சிறப்பு விற்பனைக்கு பிரத்யேக ஆரம்ப அணுகலைப் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது நிறுவனம் அளித்திருக்கும் இந்த தள்ளுபடி எலக்ட்ரானிக்ஸ் முதல் வீடு மற்றும் சமையலறை, மளிகை பொருட்கள், அழகு பொருட்கள், மொபைல்கள், ஆடைகள் மற்றும் இது போன்ற பலவற்றை உள்ளடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இது குறித்து அமேசான் நிறுவனம் கூறுகையில், “நீங்கள் ஒரு ப்ரைம் உறுப்பினராக இல்லாவிட்டால், 30 நாள் இலவச சோதனைக்கு (free-trial) பதிவுபெறுவதன் மூலம் நீங்கள் அனைத்து பயன்களையும் அனுபவிக்க முடியும். அதன் பிறகு உறுப்பினர்கள் அதை மாதத்திற்கு 16 திர்ஹம் மட்டுமே செலுத்தி அல்லது 140 திர்ஹம் என வருடாந்திர கட்டணம் செலுத்தி ப்ரைம் மெம்பெர் ஆக தொடர்ந்து இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.