ADVERTISEMENT

UAE: கொரோனா PCR பரிசோதனைக்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்த DoH..!!

Published: 24 Mar 2021, 6:04 PM |
Updated: 25 Mar 2021, 8:43 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மிகவும் குறைவான கட்டணத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்த அபுதாபியில் தற்போது கட்டணம் மேலும் குறைக்கப்பட்டு, தனிநபர் ஒருவருக்கு கோவிட் -19 PCR சோதனை மேற்கொள்ள 65 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் PCR சோதனைக்கு கட்டணமாக ஒருவருக்கு 85 திர்ஹம்ஸ் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது குறித்து சுகாதார ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் “கோவிட் -19 (PCR) சோதனையின் விலையானது மாதிரி சேகரிப்பு மற்றும் சோதனை உட்பட ஒற்றை நபருக்கு 65 திர்ஹம்சாக திருத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது தற்போது அமீரகத்தில் குறிப்பிட்ட ஐந்து துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு 14 நாட்களுக்கும் கட்டாய பி.சி.ஆர் சோதனை செய்யப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு அமீரகத்தில் இயங்கக்கூடிய முக்கிய ஐந்து துறைகளான ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் சுகாதார ஊழியர்கள், அத்துடன் சமூகம் சார்ந்து மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகள் கொண்ட சலவை நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர் போன்றவர்களுக்கு இருவாரத்திற்கு ஒரு முறை கொரோனா சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று அமீரக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT