ADVERTISEMENT

தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்காக மன்னிப்பு கேட்ட Tabby நிறுவனம்: ஏமாற்றத்தில் முடிந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு!!

Published: 27 Jun 2026, 6:42 PM |
Updated: 27 Jun 2026, 6:42 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) தளமாகக் கொண்ட ‘Tabby’ (‘buy now, pay later’ சேவையை வழங்கும் நிறுவனம்) நிறுவனத்திடமிருந்து 5,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள Emirates விமானப் பயண வவுச்சரை (voucher) வென்றதாக ஒரு ஈமெயிலை அமீரகவாசிகள் பெற்று உற்சாகத்தில் மூழ்கிய நிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த ஈமெயில் தவறுதலாக அனுப்பப்பட்டதாக இரண்டாவது ஈமெயில் வந்ததும், அந்த மகிழ்ச்சி விரைவிலேயே ஏமாற்றமாக மாறியது.

ADVERTISEMENT

இந்த எதிர்பாராத மாற்றம் பல பயனர்களை, குறிப்பாகப் பரிசை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஏற்கனவே திட்டமிடத் தொடங்கியிருந்தவர்களை, விரக்தியடையச் செய்துள்ளது.

“நீங்கள் Emirates வவுச்சரை வென்றுள்ளீர்கள்” என்ற தலைப்புடன் வந்த முதல் மின்னஞ்சல், Tabby-யின் Emirates விமான வவுச்சர் போட்டியில் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பயனர்களுக்குத் தெரிவித்தது.

ADVERTISEMENT

மேலும், அவர்கள் 5,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள Emirates வவுச்சரை வென்றுள்ளதாகவும், பரிசைப் பெறுவதற்குத் தங்கள் விநியோக விவரங்களை (delivery details) சமர்ப்பிக்குமாறு நிறுவனம் பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ADVERTISEMENT

அதன்பின் சிறிது நேரத்திலேயே, Tabby நிறுவனம் அந்தத் தவறை ஒப்புக்கொண்டு மற்றொரு மின்னஞ்சலை அனுப்பியது.

“அந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டது, அதற்காக நாங்கள் வருந்துகிறோம்,” என்று நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

மேலும் அது குறிப்பிட்டதாவது: “ஒரு நல்ல செய்தியைக் கேட்டுவிட்டு, பின்னர் அது திரும்பப் பெறப்படும்போது ஏற்படும் உணர்வை நாங்கள் அறிவோம்; உங்கள் எதிர்பார்ப்பை உயர்த்தியதற்கு நாங்கள் முழுப் பொறுப்பேற்கிறோம்.” என்று நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, முதல் மின்னஞ்சலைப் பெற்ற பிறகு தங்கள் தனிப்பட்ட விவரங்களை ஏற்கனவே உள்ளீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு, அந்த விவரங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று Tabby உறுதியளித்துள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, இந்தத் தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரிக்கும் அதே வேளையில், தகவல்கள் பாதுகாப்பாகக் கையாளப்படுவதையும் முறையாக நீக்கப்படுவதையும் உறுதி செய்வதாக நிறுவனம் கூறியுள்ளது.

அதேசமயம், தற்போது வரை, இச்சம்பவம் குறித்து Emirates நிறுவனம் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்த சலுகையானது, UAE-யில் உள்ள Tabby Card வைத்திருப்பவர்களுக்கு, 5,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள எமிரேட்ஸ் விமான வவுச்சர்களில் ஒன்றை வெல்லும் வாய்ப்பை ஏற்கெனவே வழங்கியது.

அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் ஜூன் 21 அன்று முடிவடைந்தது, இதில் Tabby Card-ஐப் பயன்படுத்திச் செலவிடப்படும் ஒவ்வொரு 500 திர்ஹம்ஸ்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு போட்டி நுழைவு (raffle entry) வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக்கான விதிமுறைகளின்படி, குலுக்கல் முடிந்த 10 நாட்களுக்குள் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொடர்பு கொள்ளப்படவிருந்தனர்.

வெற்றி பெற்ற பங்கேற்பாளர்கள் தங்கள் பரிசைப் பெறுவதற்கு முன்னதாக, தங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கும்.

இருப்பினும், ‘Tabby Card’ கூட வைத்திருக்காதவர்களுக்கு வெள்ளிக்கிழமையன்று மின்னஞ்ச தவறுதலாக அனுப்பப்பட்டிருகிறது, மேலும் அவர்கள் அந்தக் குலுக்கலில் பங்கேற்கவே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஈமெயில் குளறுபடியானது சமூக ஊடகங்களில் உடனடியாகப் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது, அங்குப் பலர் அந்த மின்னஞ்சலின் திரைப் படங்களை (screenshots) பகிர்ந்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு சிறிய மின்னஞ்சல் தவறு, சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடையே உற்சாகத்தையும், அதே சமயம் ஏமாற்றத்தையும் எப்படி விரைவாகப் பரப்பக்கூடும் என்பதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel