ADVERTISEMENT

ஜூலையில் 3 மில்லியன் பயணிகளை வரவேற்கவிருக்கும் துபாய் ஏர்போர்ட்!! தயார்நிலையை தீவிரப்படுத்தும் துபாய் சுங்கத்துறை…

Published: 11 Jul 2026, 2:40 PM |
Updated: 11 Jul 2026, 2:43 PM |
Posted By: Menaka

ஜூலை மாதத்தின் முதல் பாதியில் துபாய் விமான நிலையங்கள் வழியாக சுமார் 30 லட்சம் (3 மில்லியன்) பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பரபரப்பான கோடைக்காலப் பயணப் பருவத்திற்கான ஏற்பாடுகளை துபாய் சுங்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

விடுமுறைக்கால நெரிசல் மிகுந்த இச்சமயத்தில், பயணிகளின் விரைவான நடமாட்டத்தை உறுதி செய்யவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் சுமூகமான பயண அனுபவத்தை வழங்கவும், துபாய் விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கியப் பங்காளிகளுடன் இணைந்து ஒரு விரிவான செயல்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான காலகட்டத்தில் விமான நிலையத்தில் உயர்தரப் பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதோடு சுங்க நடைமுறைகளை விரைவுபடுத்த, துபாய் சுங்கத்துறை தற்போது விமான நிலைய முனையங்களில் 19 மேம்பட்ட உடைமைப் பரிசோதனை அமைப்புகள் (baggage-screening system) மற்றும் 77 ஆய்வு மற்றும் கண்டறியும் அமைப்புகளை இயக்கி வருகிறது.

ADVERTISEMENT

கைமுறை ஆய்வுப் பகுதிகளில் பேக்கேஜ் பரிசோதனைக்கான நேரத்தையும் சுங்கத்துறை குறைத்துள்ளது. இப்போது ஒவ்வொரு பையும் பரிசோதனைக் கருவி வழியாகச் செல்ல வெறும் ஏழு வினாடிகள் மட்டுமே ஆகிறது, இது பயணிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க உதவுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பயணிகளுக்கான புதிய சேவைகள்

அதுமட்டுமின்றி, வரிவிலக்குச் சலுகைகள் உள்ளிட்ட சுங்க விதிகளை விளக்கும் வழிகாட்டியை வழங்குவதன் மூலம், பயணிகள் சேவைகளையும் துபாய் சுங்கத்துறை மேம்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

தற்போதைய சுங்க விதிகளின் படி, வணிக நோக்கத்திற்காக அல்லாத பட்சத்தில், பயணிகள் 3,000 திர்ஹம்ஸ் (Dh3,000) வரையிலான மதிப்புள்ள தனிப்பட்ட பரிசுகளை எந்தவித சுங்க வரியும் இன்றி ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் கொண்டு வரலாம். அனுமதிக்கப்பட்ட வரம்பை விட மதிப்பு அதிகமானாலோ அல்லது பொருட்கள் வணிக ரீதியானவை எனக் கருதப்பட்டாலோ சுங்க வரிகள் விதிக்கப்படும்.

செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக ஆய்வு அறைகள்

சேவை மேம்பாட்டின் ஒரு பகுதியாக, முனையங்கள் 1, 2 மற்றும் 3-ல் செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக ஆய்வு அறைகளை அமைக்க துபாய் விமான நிலையங்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் துபாய் சுங்கத்துறை இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த புதிய வசதிகள் கால்நடை ஆய்வுகளை விரைவுபடுத்தவும், செல்லப்பிராணிகளுடன் பயணிக்கும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தயார்நிலை குறித்து துபாய் சுங்கத்துறையின் பயணிகள் செயல்பாட்டுத் துறையின் இயக்குனர் காலித் அகமது கூறுகையில், கூட்டாளர் அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு மூலம் கோடைக்காலப் பயணப் பருவத்திற்கான ஏற்பாடுகள் வெகு முன்னதாகவே தொடங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள்வதற்கும், அதே வேளையில் துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33-ன் (Dubai Economic Agenda D33) இலக்குகளை ஆதரிப்பதற்கும், துபாயின் முன்னணி உலகளாவிய சுற்றுலா மற்றும் வணிக மைய நிலையை வலுப்படுத்துவதற்கும், ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், நவீன ஆய்வு அமைப்புகள் மற்றும் பணியாளர் பயிற்சியில் துபாய் சுங்கத்துறை தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel