ADVERTISEMENT

ஷார்ஜாவில் 3-வது மாடியிலிருந்து விழுந்த 7 வயது இந்திய சிறுமி உயிரிழப்பு: என்ன நடந்தது?

Published: 25 Aug 2026, 8:39 AM |
Updated: 25 Aug 2026, 8:39 AM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள மூன்றாவது மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து 7 வயது இந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் நடந்தபோது, சஃபா முபாரக் (Safa Mubarak) என்ற அந்தச் சிறுமி, ​​அல் நப்பா (Al Nabba) பகுதியில் உள்ள தங்கள் வீட்டில் தனியாக இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த பெற்றோரின் ஒரே குழந்தையான சஃபா, அஜ்மானில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

சஃபா தூங்கிக்கொண்டிருந்த போது, தந்தை முபாரக் அலி, தனது காரை எடுப்பதற்காகச் சிறிது நேரம் கீழே சென்றிருந்ததாகவும், ஷார்ஜாவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் சிறுமியின் தாயார், ஏற்கனவே வேலைக்குச் சென்றிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அந்த சமயத்தில் சஃபா தூக்கத்திலிருந்து எழுந்து, வீட்டின் சறுக்கு ஜன்னலைத் (sliding window) திறந்திருக்கலாம் என்றும், பின்னர் தவறுதலாகக் கீழே விழுந்திருக்கலாம் என்றும் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

குடும்பத்தினர்கள் கூறியதன் படி, கேரளாவில் விடுமுறையைக் கழித்துவிட்டு அந்தக் குடும்பம் சமீபத்தில்தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்பியிருந்தது. அடுத்த வாரம் பள்ளிக்குச் செல்ல சஃபா ஆவலுடன் காத்திருந்ததாகவும் அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சஃபாவின் பெற்றோர் அவரது உடலை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே அடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும், அதற்கான சட்ட நடைமுறைகளையும் பூர்த்தி செய்ய அதிகாரிகளுடன் இணைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஷார்ஜா காவல்துறை இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, குறிப்பாக வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும்போது, ​​ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பூட்டுகள் மற்றும் தடுப்புகள் (guards) இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel