ADVERTISEMENT

அபுதாபியில் விடுமுறையை முன்னிட்டு ‘Darb’ டோல் மற்றும் ‘Mawaqif’ பார்க்கிங் இலவசம்!!

Published: 27 Aug 2026, 9:01 PM |
Updated: 27 Aug 2026, 9:01 PM |
Posted By: Menaka

இஸ்லாமியர்களால் இறைவனின் இறுதித் தூதர் எனப் போற்றப்படும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை, ஆகஸ்ட் 28 அன்று ‘Darb’ சுங்கக் கட்டணம் மற்றும் ‘Mawaqif’ பொது பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாஸ் அல் நக்ல், அல் மக்தா, ரப்தான் மற்றும் சாதியாத் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் வெள்ளிக்கிழமை முழுவதும் கட்டணமின்றி செயல்படும் என்றும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) முதல் வழக்கமான கட்டணங்கள் மீண்டும் அமலுக்கு வரும் என்றும் ‘Q Mobility’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அல் குர்ம் மற்றும் கந்தூத் டோல் கேட்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படுவதால், அங்கு ஒரு முறை கடந்து செல்வதற்கு 4 திர்ஹம் (Dh4) கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்பதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

அதேசமயம், அபுதாபி முழுவதும் உள்ள பொது பார்க்கிங் இடங்கள் வெள்ளிக்கிழமை அன்று இலவசமாக இருக்கும். ஆனால் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களில் (multi-storey car parks) வழக்கமான கட்டணங்கள் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர், சனிக்கிழமை முதல் பார்க்கிங் கட்டணங்கள் மீண்டும் அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், அபுதாபி மற்றும் அல் அய்ன் (Al Ain) ஆகிய இடங்களில் உள்ள ‘Q Mobility’-யின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வெள்ளிக்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும். சமீபத்திய அறிவிப்பின் படி, அவை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) மீண்டும் திறக்கப்படும். இருப்பினும், Darb செயலி (app), இணையதளம் மற்றும் TAMM தளம் உள்ளிட்ட நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் மூலம் மக்கள் 24 மணிநேரமும் சேவைகளைப் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel