ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கிவிட்டன. செப்டம்பர் 3 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறவுள்ள புதிய குலுக்கல் போட்டியின் மூலம், துபாயில் பயணிப்போர் தாங்கள் வாங்கும் ‘nol’ கார்டைக் கொண்டே பெரும் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
ஆம், இத்திட்டத்தில் பங்கேற்கும் ‘Zoom’ (ஜூம்) கடைகளில் நோல் பயண அட்டையை (Travel card) வாங்குவதன் மூலம், துபாய்வாசிகள் சுமார் 40,000 திர்ஹம் மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
கோடை விடுமுறைக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயணிகள் துபாயின் சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கும் வேளையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பது எப்படி?
இந்த டிராவில் பங்கேற்பது மிகவும் எளிது. சலுகைக் காலத்தில் பங்கேற்கும் ‘Zoom’ கடையில் நோல் பயண அட்டையை வாங்கினால் போதும். நீங்கள் தானாகவே பரிசுக்கான குலுக்கலில் சேர்க்கப்படுவீர்கள்.
இந்தச் சலுகை மாணவர்கள் அல்லது பெற்றோர்களுக்கு மட்டும் உரியதல்ல. தகுதியான ‘nol’ கார்டை வாங்கும் எவரும் இதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டின் முதல் நாளன்று, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமூக ஊடகங்கள் வாயிலாக இந்தக் டிரா குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
அமீரகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் நோல் கார்டை மெட்ரோ, பேருந்துகள், டிராம்கள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் உட்பட துபாயின் பொதுப் போக்குவரத்து நெட்வொர்க் முழுவதும் பயன்படுத்தலாம்.
மேலும், மளிகைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுகளை வாங்கும் இடங்கள் உட்பட, பங்கேற்கும் 2,000-க்கும் மேற்பட்ட உணவு மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இதைப் பயன்படுத்திப் பணம் செலுத்தலாம் (இதற்கான கட்டண வரம்பு 200 திர்ஹம் ஆகும்).
எனவே, ஏற்கனவே நோல் கார்டை வாங்கவோ அல்லது அதில் பணம் நிரப்பவோ (top-up) திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு, இந்த பிரச்சாரம் ஒரு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel