ADVERTISEMENT

ரமலான் மாத முதல் நாளை அறிவித்த சவூதி.. ஏப்ரல் 13 முதல் நோன்பு துவங்கும் என தகவல்..

Published: 12 Apr 2021, 1:52 AM |
Updated: 12 Apr 2021, 3:08 AM |
Posted By: admin

இந்த வருட ரமலான் மாதத்திற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை தென்படவில்லை என சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளதால், ரமலான் மாத முதல் நாளானது ஏப்ரல் 13 ம் தேதி துவங்குவதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஏப்ரல் 12 (இன்று) ஷபான் மாத இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் ரமலான் மாதத்திற்கான நோன்பு வைக்கப்படும் என்றும், ரமலான் மாதம் முடிந்து துவங்கும் ஷவ்வால் மாதமானது பிறை பார்ப்பதைப் பொறுத்து தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் அடிப்படையிலேயே இந்த வருட நோன்பானது 29 நாட்கள் நீடிக்குமா அல்லது 30 நாட்கள் நீடிக்குமா என தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகமானது, சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால், அமீரகத்திலும் நாளை முதலே நோன்பு துவங்கும் என கூறப்படுகின்றது. இருப்பினும், ஏப்ரல் 12 (இன்று) மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு அமீரக பிறை பார்க்கும் கமிட்டியின் சந்திப்பிற்குப் பிறகு அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT