ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பிறை இன்று (திங்கள்கிழமை) பார்க்கப்பட்டதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அமீரகத்தில் ஏப்ரல் 13 (நாளை) ம் தேதி ரமலான் மாதத்தின் முதல் நாள் என்று பிறை பார்க்கும் கமிட்டி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமீரகத்தில் ரமலான் மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே அமீரக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.