ADVERTISEMENT

எதிஹாட் ரயில் பயணிகளுக்கு புதிய வசதி: 22 திர்ஹமில் துபாய் மெட்ரோ, பஸ் பயணத்திற்கான நோல் ஒன்-டே பாஸ்!

Published: 29 Sep 2026, 4:52 PM |
Updated: 29 Sep 2026, 4:52 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயக்கப்படும், எதிஹாட் ரயில் பயணிகளுக்கு பயணத்தை மிகவும் எளிதாக்கி வரும் நிலையில், நாளை (செப்டம்பர் 30) முதல் அபுதாபி, துபாய் இடையே ரயில் சேவை இயக்கப்படுகின்றது. இந்நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக இப்போது தங்கள் ரயில் முன்பதிவுடன் 22 திர்ஹம்ஸில் தொடங்கும் நோல் ஒரு நாள் பாஸ்ஸை (Nol One-Day Pass) சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே ஒரு QR குறியீட்டைக் கொண்டு, தகுதியான பயணங்களுக்கு துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்துகளைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய்க்கும் மற்ற எமிரேட்களுக்கும் இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு, இந்த ஒருங்கிணைந்த வழி, பல பொதுப் போக்குவரத்துப் பயணங்களுக்குத் தனித்தனியாகப் பணம் செலுத்தாமல், தங்கள் பயணத்தின் கடைசி இலக்கை நிர்வகிப்பதை எளிதாக்கக்கூடும்.

செப்டம்பர் 30 அன்று தொடங்கவுள்ள எதிஹாட் ரயிலின் துபாய் பயணிகள் சேவைக்கு முன்னதாகவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இச்சேவை ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் உள்ள அல் யலயிஸ் நிலையத்தை அபுதாபி மற்றும் ஃபுஜைராவுடன் ஆகியவற்றுடன் இணைக்கிறது.

ADVERTISEMENT

தற்போது, அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கூடுதல் வசதி, ரயிலில் வந்திறங்கிய பிறகு துபாய்க்குள் பயணத்தைத் தொடர பயணிகளுக்கு எளிதான வழியை வழங்குகிறது.

ரயில் மற்றும் துபாய் பொதுப் போக்குவரத்திற்கு ஒரே QR குறியீடு

அதாவது, எதிஹாத் ரயில் முன்பதிவில் Nol One-Day Pass-ஐச் சேர்க்கும் பயணிகள், தங்கள் ரயில் டிக்கெட் மற்றும் துபாய் பொதுப் போக்குவரத்து டிக்கெட் ஆகிய இரண்டையும் ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த QR குறியீடு எதிஹாத் ரயில் செயலி (app) மற்றும் முன்பதிவு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, பயணத்தின் போது தேவைப்படும்போது இதை ஸ்கேன் செய்யலாம் அல்லது காண்பிக்கலாம்.

Nol One-Day Pass-இன் விலைகள்

பயணிகள் இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:

  • சாதாரண (Regular) நோல் ஒன் டே பாஸ்: 22 திர்ஹம்ஸ்
  • கோல்டு நோல் ஒன் டே பாஸ்: 42 திர்ஹம்ஸ்

கோல்டு பாஸ் வைத்திருக்கும் பயணிகள் துபாய் மெட்ரோ மற்றும் டிராமில் உள்ள கோல்டு கிளாஸ் பெட்டிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமின்றி, எதிஹாத் ரயில் டிக்கெட் வகையைப் பொருட்படுத்தாமல் பயணிகள் கோல்டு நோல் பாஸ் தேர்ந்தெடுக்கலாம். அதாவது, ‘Comfort’ வகுப்பு ரயில் டிக்கெட் வைத்திருக்கும் ஒரு பயணி கூட கோல்டு நோல் பாஸ்ஸை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த pass -ஐ எங்கு பயன்படுத்தலாம்?

இந்த பாஸ் பின்வருவனவற்றில் தகுதியான பயணங்களை உள்ளடக்கியது:

  • துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் க்ரீன் வழித்தடங்கள்
  • துபாய் டிராம்
  • குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் (zones) இயங்கும் RTA பொதுப் பேருந்துகள்

ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மெட்ரோ நிலையத்திற்கு வரும் பயணிகள், அங்கிருந்து துபாய் மெட்ரோவில் ஏறி நகரின் பிற பகுதிகளுக்குத் தங்கள் பயணத்தைத் தொடரலாம்.

Nol Pass-ஐ எவ்வாறு சேர்ப்பது?

எதிஹாத் ரயில் பயணத்தை முன்பதிவு செய்யும் போது, ​​பயணிகள் பணம் செலுத்துவதற்கு முன் ‘End-to-End Journey Options’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Nol One-Day Pass’ஐத் தேர்வு செய்யலாம்.

பின்னர் அவர்கள் ‘ரெகுலர்’ அல்லது ‘கோல்டு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைந்த முன்பதிவை நிறைவு செய்யலாம். மாறாக, ‘நோல் பே’ மற்றும் ‘S’hail’ உள்ளிட்ட RTA-வின் ஸ்மார்ட் சேவைகள் (smart channels) மூலமாகவும் பயணிகள் பயணத்தைத் தொடங்கலாம். இதற்காக, எதிஹாத் ரயிலின் முன்பதிவு தளத்திற்குச் செல்லும் முன் ‘Etihad Rail’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தப் பயணச்சீட்டை (pass) ரயில் பயண நாளன்றே பயன்படுத்த வேண்டுமா?

‘Nol One-Day Pass’ வாங்கிய தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் (பயன்படுத்தத் தொடங்கும் வரை) என்று கூறப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தத் தொடங்கியதும் (activate செய்ததும்), அது அந்த ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது, பயணிகள் தங்கள் எதிஹாத் ரயில் பயணத்தை மேற்கொள்ளும் அதே நாளில்தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆகவே, ரயில் பயணம் ஏற்கனவே முடிந்துவிட்டாலும் கூட, 90 நாள் செல்லுபடியாகும் காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பாஸ்ஸை பயன்படுத்தத் தொடங்கலாம்.

மேலும், பயணி தனது எதிஹாத் ரயிலைத் தவறவிட்டால், ‘Nol One-Day Pass’-ஐ அந்த 90 நாள் காலத்திற்குள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், இதற்கான கட்டணம் திரும்பப் பெற இயலாது (non-refundable) என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

அதுமட்டுமில்லாமல், ‘Nol One-Day Pass’ துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) வழங்கப்படுகிறது. எனவே, இது அதன் கட்டணக் கொள்கை மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

குறிப்பாக, இது ஒரு பயணிக்கு மட்டுமேயான தனிப்பட்ட பாஸ் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ, நகலெடுக்கவோ அல்லது வேறொருவருக்கு மாற்றவோ முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel