ADVERTISEMENT

அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அறிவித்த அமீரகம்: முழு டேங்க் நிரப்ப எவ்வளவு செலவாகும்?

Published: 30 Sep 2026, 8:34 PM |
Updated: 30 Sep 2026, 8:34 PM |
Posted By: Menaka

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயக் குழு அக்டோபர் மாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் விலைப்பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தில் அனைத்து வகையான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்வதால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ADVERTISEMENT

இந்த புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. இதில் பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு 4 திர்ஹம் என்ற அளவைத் தாண்டுகிறது. அதேசமயம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. செப்டம்பர் 29, செவ்வாய்க்கிழமையன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 107 டாலர் என்ற அளவில் வர்த்தகமானதாக அறிக்கைகள் கூறுகின்றன.

புதிய மாதந்திர கட்டணங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT
எரிபொருள் வகைஅக்டோபர் 2026செப்டம்பர் 2026
சூப்பர் 984.40 திர்ஹம்ஸ் 3.80 திர்ஹம்ஸ்
ஸ்பெஷல் 954.28 திர்ஹம்ஸ் 3.69 திர்ஹம்ஸ்
இ-பிளஸ் 914.21 திர்ஹம்ஸ் 3.61 திர்ஹம்ஸ்
டீசல் (Diesel)4.80 திர்ஹம்ஸ் 4.30 திர்ஹம்ஸ்

அக்டோபரில் முழு டேங்க் நிரப்ப எவ்வளவு செலவாகும்?

அமீரகத்தில் வாகன ஓட்டிகள் செலவழிக்கும் தொகையானது, அவர்களின் வாகனத்தின் எரிபொருள் டேங்க் அளவு மற்றும் பயன்படுத்தப்படும் பெட்ரோல் வகையைப் பொறுத்து அமையும்.

51 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு சாதாரண சிறிய ரக காருக்கு (compact car), அக்டோபர் மாதத்தில் ‘சூப்பர் 98’ பெட்ரோல் மூலம் முழு டேங்க் நிரப்ப 224.40 திர்ஹம் செலவாகும். இது செப்டம்பர் மாதத்தில் 193.80 திர்ஹமாக இருந்தது.

ADVERTISEMENT

அதேபோல், சராசரியாக 62 லிட்டர் கொள்ளளவு கொண்ட செடான் (sedan) ரக காருக்கு, ‘Super 98’ பெட்ரோல் மூலம் முழு டேங்க் நிரப்ப 272.80 திர்ஹம் செலவாகும். இது கடந்த மாதத்தில் 235.60 திர்ஹமாக இருந்தது. சராசரியாக 74 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய SUV வாகனத்திற்கு, சூப்பர் 98 எரிபொருளை முழுமையாக நிரப்ப 325.60 திர்ஹம் செலவாகும். இது செப்டம்பர் மாதத்தில் 281.20 திர்ஹம்ஸ் ஆக இருந்தது.

பல்வேறு வாகனங்களுக்கான முழு டேங்க் (Full-tank) எரிபொருள் செலவு

சிறிய ரக கார் (Compact car) — 51 லிட்டர் கொள்ளளவு

பெட்ரோல் வகைஅக்டோபர்செப்டம்பர்
Super 98224.40 திர்ஹம்ஸ் 193.80 திர்ஹம்ஸ்
Special 95218.28 திர்ஹம்ஸ் 188.19 திர்ஹம்ஸ்
E-Plus 91214.71 திர்ஹம்ஸ் 184.11 திர்ஹம்ஸ்

செடான் (Sedan) கார் — 62 லிட்டர் கொள்ளளவு

பெட்ரோல் வகைஅக்டோபர்செப்டம்பர்
Super 98272.80 திர்ஹம்ஸ் 235.60 திர்ஹம்ஸ்
Special 95265.36 திர்ஹம்ஸ் 228.78 திர்ஹம்ஸ்
E-Plus 91261.02 திர்ஹம்ஸ் 223.82 திர்ஹம்ஸ்

SUV — 74 லிட்டர் கொள்ளளவு

பெட்ரோல் வகைஅக்டோபர்செப்டம்பர்
Super 98325.60 திர்ஹம்ஸ் 281.20 திர்ஹம்ஸ்
Special 95316.72 திர்ஹம்ஸ் 273.06 திர்ஹம்ஸ்
E-Plus 91311.54 திர்ஹம்ஸ் 267.14 திர்ஹம்ஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைகள் ஏன் ஒவ்வொரு மாதமும் மாறுகின்றன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் மறுஆய்வு செய்யப்படுகின்றன. உலகளாவிய சராசரி கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் எரிபொருள் விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சமீபத்திய மாதங்களில் விலைகள் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளன. பிராந்திய மோதல் காரணமாக பல மாதங்களாக விலை உயர்ந்த நிலையில், ஜூலை மாதத்தில் விலை குறைந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விலைகள் மீண்டும் அதிகரித்தன. வாகன ஓட்டிகளுக்கு, இந்த மாதாந்திர மாற்றங்கள் குடும்ப பட்ஜெட்டைப் பாதிக்கக்கூடும்.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வைத் தொடர்ந்து, அமீரகத்தில் 2022-ல் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 4 திர்ஹம்சைத் தாண்டியது.

ஜூலை 2022-ல், சூப்பர் 98 ஒரு லிட்டருக்கு 4.63 திர்ஹம்ஸ் என்ற விலையை எட்டியது, அதே நேரத்தில் ஸ்பெஷல் 95-ன் விலை 4.52 திர்ஹம்ஸ் ஆக இருந்தது.

எனவே, சமீபத்திய அக்டோபர் மாத விலைகள் பெட்ரோல் விலையை மீண்டும் ஒரு லிட்டருக்கு 4 திர்ஹம்ஸ்க்கு மேல் கொண்டு வந்துள்ளன, இது வழக்கமான எரிபொருள் நிரப்பும் செலவை அதிகரிப்பதால் அமீரக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel