ADVERTISEMENT

வெறும் 19 திர்ஹம்ஸில் ஷார்ஜாவில் இருந்து ஃபுஜைராவிற்கு எதிஹாட் ரயில் பயணம்: துவங்கிய முன்பதிவு!!

Published: 29 Sep 2026, 8:02 PM |
Updated: 29 Sep 2026, 8:02 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் தேசிய ரயில் நெட்வொர்க்கான எதிஹாட் ரயில் சேவையானது படிப்படியாக இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் இப்போது ஷார்ஜாவின் அல் தைத் நிலையத்திலிருந்து பயணங்களை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஷார்ஜாவில் இருந்து ஃபுஜைராவுக்கான 25 நிமிட ரயில் பயணத்திற்கு கட்டணம் வெறும் 19 திர்ஹம்களில் தொடங்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் அல் யலாயிஸ் (Al Yalayis) நிலையத்திலிருந்து நாளை பயணிகள் சேவை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஷார்ஜாவின் மத்தியப் பகுதியில் வசிப்பவர்களுக்கு எமிரேட்களுக்கு இடையே பயணம் செய்வதற்கான மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.

முராகாபத் (Muragabat) பகுதியில் அமைந்துள்ள அல் தைத் நிலையம், தற்போது ஃபுஜைரா மற்றும் அபுதாபி உள்ளிட்ட இடங்களுக்கான பயண இணைப்புகளை வழங்குகிறது.

ADVERTISEMENT

அல் தைத் முதல் புஜைரா வரை: கட்டணங்கள் மற்றும் நேரங்கள்

பயணிகள் ‘கம்ஃபோர்ட்’ (Comfort) மற்றும் ‘பிரீமியம்’ (Premium) ஆகிய வகுப்புகளைத் தேர்வு செய்யலாம். புறப்படும் நேரத்தைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும்.

காலை சேவை

ADVERTISEMENT
  • அல் தைதிலிருந்து (Al Dhaid) புறப்பாடு: காலை 9.41 மணி
  • ஃபுஜைராவை (Fujairah) அடைதல்: காலை 10.06 மணி
  • கம்ஃபர்ட் (Comfort) வகுப்பு: Dh19 முதல்
  • பிரீமியம் (Premium) வகுப்பு: Dh49 முதல்

மாலை சேவை

  • அல் தைதிலிருந்து புறப்பாடு: மாலை 7.51 மணி
  • ஃபுஜைராவை அடைதல்: இரவு 8.16 மணி
  • கம்ஃபர்ட் கிளாஸ்: Dh24 முதல்
  • பிரீமியம் கிளாஸ்: Dh79 முதல்

ஃபுஜைராவிலிருந்து அல் தைதிற்குத் திரும்பும் சேவைகள்

திரும்பும் பயணத்திற்கான இரண்டு சேவைகள் உள்ளன:

காலை சேவை

  • ஃபுஜைராவிலிருந்து புறப்பாடு: காலை 6.05 மணி
  • அல் தைதை அடைதல்: காலை 6.30 மணி
  • கம்ஃபர்ட் கிளாஸ்: 19 திர்ஹம் முதல்
  • பிரீமியம் கிளாஸ்: 49 திர்ஹம் முதல்

மாலை சேவை

  • ஃபுஜைராவிலிருந்து புறப்பாடு: மாலை 5.17 மணி
  • அல் தைதை அடைதல்: மாலை 5.42 மணி
  • கம்ஃபர்ட் கிளாஸ்: 19 திர்ஹம் முதல்
  • பிரீமியம் கிளாஸ்: 79 திர்ஹம் முதல்

அல் தைத் – அபுதாபி பயணக் கட்டணங்கள்

அல் தைதிலிருந்து அபுதாபிக்குச் செல்லும் பயணிகள் பின்வரும் கட்டணங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்:

  • கம்ஃபர்ட் கிளாஸ்: 69 திர்ஹம்
  • பிரீமியம் கிளாஸ்: 149 திர்ஹம்

அல் தைத் எதிஹாட் ரயில் நிலையத்தை அடைவது எப்படி?

பயணிகள் ரயில் நிலையத்தை அடைய அல்லது அங்கிருந்து புறப்பட பொதுப் பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் ரைட்-ஹெய்லிங் (ride-hailing) சேவைகளைப் பயன்படுத்தலாம்.

தற்போது அல் தைத் நிலையத்திற்கு மூன்று பேருந்து வழித்தடங்கள் சேவையளிக்கின்றன:

  • ER1: அல் மடம் (Al Madam) பேருந்து நிலையம்
  • ER2: அல் சஜா (Al Sajaa) பேருந்து நிலையம்
  • ER3: அல் ஜுபைல் (Al Jubail) பேருந்து நிலையம்

இவை தவிர, தொடர் பயணத்திற்குப் பயணிகள் ஊபர் (Uber) அல்லது ஷார்ஜா டாக்ஸிகளையும் பயன்படுத்தலாம். ஷார்ஜா டாக்ஸி மீட்டர் கட்டணம் 3 திர்ஹம்ஸில் தொடங்குகிறது.

அல் தைத் (Al Dhaid) நிலையத்தில் இலவச பார்க்கிங்

இங்கு மொத்தம் 26 பார்க்கிங் இடங்கள் உள்ளன; அவற்றில்:

  • சாதாரண வாகனங்களுக்கான 19 இடங்கள்
  • மின்சார வாகனங்களுக்கான 7 இடங்கள்

எதிஹாட் ரயில் (Etihad Rail) நிறுவனத்தின் தகவலின்படி, தற்போது பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்துவது இலவசமாகும்.

அல் தைத் நிலையத்தின் வசதிகள்

இங்கு பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் உள்ளன, அவற்றுள் சில:

  • தொழுகை அறை
  • பயணிகள் காத்திருப்புப் பகுதி
  • கழிவறைகள்
  • பயணிகளை ஏற்றி-இறக்கும் பகுதி
  • முதலுதவி அறை
  • தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள்
  • தகவல் மற்றும் உதவி மையம்
  • டாக்ஸி மற்றும் ‘இ-ஹெய்லிங்’ (e-hailing) சேவைகளுக்கான பிரத்யேகப் பகுதிகள்

முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஷார்ஜாவின் மத்தியப் பகுதிவாசிகள் அல் தைத் நிலையத்தைப் பயன்படுத்தி ஃபுஜைரா மற்றும் அமீரகத்தின் பிற இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel