ADVERTISEMENT

துபாய் டியூட்டி ஃப்ரீ டிரா: 11 ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு 1 மில்லியன் டாலர் வென்ற இந்தியர்!!

Published: 9 Oct 2026, 10:55 AM |
Updated: 9 Oct 2026, 10:55 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர், துபாய் டியூட்டி ஃப்ரீயின் ‘Millennium Millionaire’ டிராவில் 11 ஆண்டுகளாகப் பங்கேற்ற நிலையில், 1 மில்லியன் டாலர் (சுமார் 3.67 மில்லியன் திர்ஹம்) பரிசை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

கேரளாவைச் சேர்ந்த 38 வயதான ஷாஹீன் சாஹிலா பஷீர் முகமது தான் அந்த அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் ஆவார். ஒரு குழந்தைக்குத் தந்தையான இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அல் அய்ன் (Al Ain) பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

தற்போது முசாஃபாவில் (Mussafah) உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் மூத்த மதிப்பீட்டுப் பொறியாளராக (Senior Estimation Engineer) பணிபுரிந்து வரும் இவருக்கு எதிர்பாராத பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

வெற்றிக்குப் பிறகு பேசிய முகமது, துபாய் டியூட்டி ஃப்ரீக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இத்தகைய சலுகை மற்றும் குலுக்கல் திட்டங்கள் மக்களின் கனவுகளை நனவாக்க ஒரு வாய்ப்பை வழங்குகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த வெற்றி அவருக்கு இன்னும் சிறப்பானதாக அமைந்தது. ஏனெனில், அக்டோபர் 16 அன்று அவருக்கு 39 வயது பூர்த்தியாகவுள்ளது. எனவே, இந்தப் பரிசை தனது பிறந்தநாளுக்கான முன்கூட்டிய பரிசாகக் கருதுவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், டிராவில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது சொந்த ஊரில் ஒரு வீட்டை வாங்கவும், மீதமுள்ள தொகையைத் தனது மகளின் கல்விக்காகச் சேமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக முகமது தெரிவித்தார்.

மேலும் இருவருக்கு சொகுசு வாகனங்கள்

சமீபத்திய துபாய் டியூட்டி ஃப்ரீ டிராக்களில் முகமது மட்டுமே வெற்றியாளர் அல்ல.

ஈராக்கைச் சேர்ந்த ஆர்யா முஸ்தபா (Arya Mustafa) என்பவர் ‘ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ்’ (Finest Surprise) டிராவில் ‘BMW X6 M Competition’ காரை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இந்தியரான 65 வயதான சியாலி ஷம்சுதீன் (Seeyali Shamsudheen), ‘ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ்’ தொடர் 680-ல் (Series 680), 0270 என்ற டிக்கெட் எண்ணின் மூலம் ‘Aprilia Tuono V4 Factory 1100’ என்ற மோட்டார் சைக்கிளை வென்றுள்ளார்.

துபாயில் வசிக்கும் ஷம்சுதீன், கராமாவில் (Karama) உள்ள ஒரு தொலைபேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகிறார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான இவர், தனது வெற்றியைப் பற்றி அறிந்ததும் தொலைபேசி வாயிலாக துபாய் டியூட்டி ஃப்ரீக்கு நன்றி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

துபாய் டியூட்டி ஃப்ரீயின் பிரபலமான டிரா திட்டங்கள் மூலம் பெரும் ரொக்கப் பரிசுகளையும் சொகுசு வாகனங்களையும் வென்ற வெளிநாட்டினரின் நீண்ட பட்டியலில் இந்த வெற்றியாளர்களும் இணைந்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel