ADVERTISEMENT

ரமலான் 2021: அமீரக குடியிருப்பாளர்களுக்கு எத்தனை நாட்கள் ஈத் விடுமுறை கிடைக்கும்??

Published: 15 Apr 2021, 4:48 PM |
Updated: 15 Apr 2021, 4:51 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஏப்ரல் 13, செவ்வாய்க்கிழமை முதல் புனித ரமலான் மாதத்தை அனுசரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வருட நோன்பானது ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கின்றது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் 29 ம் தேதி முதல் அதற்கடுத்த மாதமான ஷவ்வால் மாதம் 3 ம் தேதி வரை குடியிருப்பாளர்களுக்கு ஈத் எனும் பெருநாள் விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதமானது இஸ்லாமிய நாட்காட்டியின் 9 வது மாதம். ஒரு இஸ்லாமிய மாதம் 29 நாட்கள் அல்லது 30 நாட்களில் முடிவடைகிறது.

ADVERTISEMENT

ரமலான் மாதம் 29 நாட்கள் நீடித்தால், குடியிருப்பாளர்கள் மே 11, செவ்வாய்க்கிழமை முதல் மே 14 வெள்ளிக்கிழமை வரை என நான்கு நாட்கள் விடுமுறை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ரமலான் மாதம் 30 நாட்கள் நீடித்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்களுக்கு மே 11 செவ்வாய்க்கிழமை முதல் மே 15 சனிக்கிழமை வரை ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

ரமலான் மாதத்தின் இறுதி நாள் பிறை பார்ப்பதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.