ADVERTISEMENT

UAE: ரமலான் மாத வேலை நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்த பொருளாதார மேம்பாட்டு துறை..!!

Published: 16 Apr 2021, 8:25 AM |
Updated: 16 Apr 2021, 10:21 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு  அனைத்து இடங்களிலும் வேலை நேரம் குறைக்கப்பட்ட நிலையில், அஜ்மானில் ரமலான் வேலை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமீரகத்தின் பொருளாதார மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரமலான் மாதத்தில் 4 மணி வரை பொருளாதார நடவடிக்கைகளுக்கான வேலை நேரத்தை நீட்டிப்பதாக இத்துறை அறிவித்துள்ளது.

மேலும், நிறுவனங்கள் கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விதிகளை மீறுபவர்கள் மீது நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT