துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் இனி மேலும் இரண்டு புதிய பகுதிகளில் கட்டண பார்க்கிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துபாயின் வார்சன் இண்டஸ்ட்ரியல் மற்றும் துபாய் ஐலேண்ட்ஸ் ஆகிய மேலும் இரண்டு பகுதிகளில் இனி பார்க்கிங் இடங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இப்பகுதிக்கான மணிநேரக் கட்டணம் 4.20 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குகிறது. எமிரேட்டின் மிகப்பெரிய கட்டணப் பொது பார்க்கிங் வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனமான பார்க்கின் (Parkin), ஓட்டுநர்களுக்கான ஒரு ஆலோசனையில் இந்த புதிய பார்க்கிங் ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், வார்சன் இண்டஸ்ட்ரியல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்க்கிங் இடத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம், துபாய் ஐலேண்ட்ஸில் 24 மணி நேரமும் கட்டண பார்க்கிங் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பகுதிகளிலும் உள்ள பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் சந்தா விருப்பங்களின் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வார்சன் இண்டஸ்ட்ரியல்: பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் நேரங்கள்
துபாயின் கிழக்குப் பகுதியில், இன்டர்நேஷனல் சிட்டிக்கு எதிரிலும், டிராகன் மார்ட்டுக்கு அருகிலும் அமைந்துள்ள வார்சன் இண்டஸ்ட்ரியல், அல் வர்கா, துபாய் சிலிக்கான் ஓயாசிஸ் மற்றும் அகாடமிக் சிட்டிக்கு அருகிலும் உள்ளது.
இப்பகுதியில் கட்டண பார்க்கிங் குறியீடு 622T-இன் கீழ் வருகிறது, அதற்கான கட்டணங்களும் நேரங்களும் பின்வருமாறு:
- மணிநேரக் கட்டணம்: 4.20 திர்ஹம்ஸ்
- செயல்பாட்டு நேரம்: ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
வார்சன் இண்டஸ்ட்ரியல் பகுதியில் வழக்கமாக வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் நீண்ட கால சந்தாக்களைத் தேர்வு செய்யலாம்.
சந்தா தொகுப்புகள்:
- 1 மாதம்: 580 திர்ஹாம்ஸ்
- 3 மாதங்கள்: 1,385 திர்ஹாம்ஸ்
- 6 மாதங்கள்: 2,080 திர்ஹாம்ஸ்
- 1 வருடம்: 3,460 திர்ஹாம்ஸ்
துபாய் ஐலேண்ட்ஸ்: பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் நேரங்கள்
துபாய் ஐலேண்ட்ஸ், தேராவிற்கு அருகில் துபாயின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது, அங்கும் கட்டண பொது பார்க்கிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பார்க்கிங் அமைப்பு குறியீடு 101G-இன் கீழ் செயல்படுகிறது, இதற்கான கட்டணங்கள் 24 மணி நேரமும் பொருந்தும்.
- மணிநேரக் கட்டணம்: 4.20 திர்ஹாம்ஸ்
- செயல்பாட்டு நேரம்: 24 மணி நேரமும்
இப்பகுதிக்கு அடிக்கடி வரும் ஓட்டுநர்கள் பின்வரும் சந்தாத் தொகுப்புகளில் இருந்து தேர்வு செய்யலாம்:
- 3 மாதங்கள்: 900 திர்ஹாம்ஸ்
- 6 மாதங்கள்: 1,800 திர்ஹாம்ஸ்
- 1 வருடம்: 3,600 திர்ஹாம்ஸ்
இந்த மாதத் தொடக்கத்தில், பார்க்கின் நிறுவனம் துபாய் மல்டி கமாடிட்டிஸ் சென்டருடன் (DMCC) தனது பார்க்கிங் சேவைகள் ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்குப் புதுப்பித்து, ஜுமைரா லேக்ஸ் டவர்ஸில் (JLT) தனது செயல்பாடுகளைத் தொடர்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், JLT முழுவதும் சுமார் 2,800 கட்டண பார்க்கிங் இடங்களை நிர்வகிப்பதற்கும் இயக்குவதற்கும் பார்க்கின் நிறுவனம் பிரத்யேகப் பொறுப்பை ஏற்கும். இதில் 250 இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக நிறுத்துமிடங்களும் அடங்கும். அதுமட்டுமில்லாமல், இந்நிறுவனம் சூரிய சக்தி உள்கட்டமைப்பை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பார்க்கின் நிறுவனம் துபாய் முழுவதும் சுமார் 268,000 கட்டண பார்க்கிங் இடங்களை நிர்வகிக்கிறது. இதன் செயல்பாடுகளில் சாலையோர பார்க்கிங், பார்க்கிங் திடல்கள், பொதுப் பன்னடுக்கு வசதிகள் மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பார்க்கிங் ஆகியவை அடங்கும்.
தற்போது, வார்சான் இண்டஸ்ட்ரியல் மற்றும் துபாய் ஐலேண்ட்ஸில் கட்டண பார்க்கிங் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, எமிரேட்டின் விரிவடைந்து வரும் ஒழுங்குபடுத்தப்பட்ட பார்க்கிங் வலையமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel