ADVERTISEMENT

ஃபுஜைராவில் கோர விபத்து: லாரி ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் பலர் உயிரிழந்த சோகம்.. காயம் பலருக்கு ஏற்பட்டதாகவும் தகவல்!!

Published: 12 Nov 2026, 1:03 PM |
Updated: 12 Nov 2026, 1:03 PM |
Posted By: Menaka

ஃபுஜைரா எமிரேட்டின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஷேக் கலீஃபா பின் சையத் சாலையில், லாரி ஒன்று பல வாகனங்களுடன் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையின் சிறப்புப் பிரிவினர், ஆம்புலன்ஸ் சேவையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக ஃபுஜைரா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து, உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்து நடந்த இடத்தைப் பாதுகாப்பான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அதிகாரிகள், போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விசாரணை தொடக்கம்

விபத்துக்கான காரணம் மற்றும் சூழலைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளதாக ஃபுஜைரா காவல்துறை பொதுக் கட்டளை மையம் (Fujairah Police General Command) தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்துகளைத் தவிர்க்கவும், சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும், பிற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பேணவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel