ADVERTISEMENT

சவூதி அரேபியா: இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த மக்கா க்ளாக் டவர்!!

Published: 19 Nov 2026, 8:35 PM |
Updated: 19 Nov 2026, 8:35 PM |
Posted By: Menaka

சவூதி அரேபியாவின் அடையாளச் சின்னமான மெக்கா கடிகார கோபுரம் (Mecca Clock Tower), இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் பெற்றுள்ளது. இது அந்நாட்டின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றிற்கு கிடைத்துள்ள மற்றொரு உலகளாவிய அங்கீகாரமாகும்.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை அன்று, மெக்கா நகரம் மற்றும் புனிதத் தலங்களுக்கான அரச ஆணையத்தால் (Royal Commission for Mecca City and Holy Sites) இந்த சாதனைகள் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இக்கோபுர வளாகத்தில் உள்ள இரண்டு இடங்கள், உலகளவில் இரண்டு பிரிவில் மிக உயர்ந்தவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அதாவது, தரைமட்டத்திலிருந்து 426.875 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ‘கடிகார கோபுர அருங்காட்சியகம்’ (Clock Tower Museum), கட்டிடத்திற்குள் அமைந்த மிக உயர்ந்த அருங்காட்சியகம் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், 560.875 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோபுரத்தின் வெளிப்புற கண்காணிப்பு தளம் (outdoor observation deck), உலகின் மிக உயர்ந்த வெளிப்புற கண்காணிப்பு தளம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

இவை இரண்டும் மெக்கா கடிகார கோபுர வளாகத்தின் ஒரு பகுதியாகும். இந்த வளாகம், இஸ்லாத்தின் மிகப்புனித இடமான மஸ்ஜிதுல் ஹராமை (Grand Mosque) நோக்கியவாறு அமைந்துள்ளது.

ADVERTISEMENT

கின்னஸ் உலக சாதனைகளின்படி, இந்த இரண்டு சாதனைகளும் ஜனவரி 5, 2026 அன்று எட்டப்பட்டன. சவூதி அதிகாரிகள் இந்த அங்கீகாரத்தை நவம்பர் 17 அன்று அறிவித்தனர்.

மக்காவின் கட்டடக்கலை மற்றும் கலாச்சார அடையாளங்களை மேம்படுத்துவதற்கும், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகளைச் சிறந்ததாக்குவதற்கும், புனித நகரத்திற்கு வரும் லட்சக்கணக்கான வழிபாட்டாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவே இந்தச் சாதனைகள் என்று அரச ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், மெக்காவின் வரலாற்று, அறிவியல் மற்றும் கட்டடக்கலை பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துவதையும், உலகளாவிய மத மற்றும் கலாச்சார மையமாக மெக்காவின் நிலையை வலுப்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel